தன்னாமுனை கிராமத்தில் சமுர்த்தி தனாபிமானி கடனாக 10 லட்சம்; விடுவிப்பு.......
சமுர்த்தி திட்டம் வறியவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவே உருவாக்கப்பட்டதாகும் படிப்படியாக முன்னேற்றம் அடைந்து தம் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவே சமுர்த்தியின் தார்மீக மந்திரம். இதன் அடிப்படையில் தன்னாமுனை கிராமத்தில் வசிக்கும் சமுர்த்தி பயனுகரியான அகஸ்டின் டிமெல் மேகலா தம் சுயமுயற்சியின் மூலம் தன் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றார் இவருக்கு ஆறமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கியூடாக தனாபிமானி கடன் மூலம் பத்து லட்சம் ரூபாய் பனத்தை ஆறுமுகத்தான் குடியிருப்பு வங்கி முகாமையாளர் திரு.செந்தூர்வாசன் முன்னிலையில் ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கியின் கடன் லிகிதர் திருமதி ஜெகனி அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது...
2000ம் ஆண்டில் சமுர்த்தி திட்டத்தில் இணைந்து சமுர்த்தி வங்கி ஊடாக முதல் 10000 ரூபாய் கடன் பெற்று இதன் பின் ஒரு லட்சம் ரூபாய் கடன் பெற்று அதன் பின் ஏறாவூர் பற்று சமுர்த்தி மகா சங்கத்தின் ஊடாக ஐந்து லட்சம் கடன் பெற்று அதனை ஒழுங்கான முறையில் செலுத்தி தற்போது தன் உற்பத்தி பொருட்களான மிக்சர் தயாரிப்பிற்கு பெரியதொரு இடம் இல்லாத காரணத்தால் புதியதொரு கட்டிடம் அமைக்க ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி மகா சங்கத்தின் ஊடாக தனாபிமானி கடன் திட்டத்தின் ஊடாக பத்து லட்சம் கடனுக்கு விண்ணப்பித்து அதனை பெற்றுள்ளார். தன்னாமுனை கிராமத்தில் புனித மரியாள் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் தலைவராக செயற்படும் இவர் அச்சங்கத்தின் முன் மாதிரிகையான ஒரு பயனுகரியாக திகழ்கின்றார்.
இவருடன் இணைந்து 03 பணியாளர்கள் இத்தொழில் ஈடுபடுவதாகவும் இக்கட்டிடத்தை அமைக்க தாம் முதல் கட்ட முதலீட்டை இட்டதாகவும் தன் முன்னேற்றத்திற்கு சமுர்த்தியே உதவி வருவதாகவும் தாமே மட்டக்களப்பு செங்கலடி போன்ற இடங்களில் உள்ள சிறுகடைகளுக்கு சென்று வியாபாரத்தில் ஈடுபடுவதாகவும் குறிப்பிட்டார். இத்தொழிலை இன்னும் தாம் மேம்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தன்னாமுனை கிராமத்தை பொறுத்தவரை இது தான் சமுர்த்தி திட்டத்தின் மூலம் வழங்கப்படும் முதல் பத்து லட்சத்திற்கான கடனாகும். இக்கடனை வழங்குவதற்காக இத்திட்டத்தை பார்வையிட்ட ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் திரு.கலாதேவன் அவர்கள் குறிப்பிடுகையில் இதே போல் பல திறமைவாய்ந்த சமுர்த்தி பயனுகரிகள் மறைந்து வாழ்கின்றார்கள் கூடுதலான வட்டி வீதத்தில் கடன்களை பெற்று தம் வாழ்வை மாய்த்துக் கொள்கின்றார்கள் இவ் தனாபிமான கடனுக்கு வருடாந்தம் 8 வீதமே அறவிடப்படுவதாகவும் சிறந்த முயற்சியாளராக அகஸ்டின் டிமெல் மேகலா காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
இக்கடனை வழங்க அனுமதியளித்த பிரதேச செயலக சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் திரு.இராசலிங்கம் குறிப்பிடுகையில் கடன்கைளை வழங்கியதுடன் இவர்களின் செயற்பாட்டை கிராம சமுர்த்தி அபிவிருத்தி உத்;தியோகத்தர் தொடர் கண்காணிப்பை மேற் கொள்வதுடன் தேவைப்படும் மேலதிக உதவிகளை செய்து இவர்களை மேம்படுத்த்தி இவர்கள் தாமாக முன் வந்து தமது சமுர்த்தி நிவாரன கொடுப்பணவை வழங்க முன்வரவேண்டும் என குறிப்பிட்டார்.
நாமும் இவரை வாழ்த்துவோம் இவர் மேலும் முன்னேற்றமடை வேண்டும் என்றும் இன்னும் பல சமுர்த்தி பயனுகரி முன்னேறுவதில் நாம் ஒரு ஏணியாக இருக்க வேண்டும் என்பதிலும்.

வறுமையை தணிப்போம்
சமுர்த்தி பயனுகரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவோம்.....
Comments
Post a Comment