இம்மாத வீட்டு லொட்டரி மயிலம்பாவெளி கிராமத்திற்கு.......

இம்மாத வீட்டு லொட்டரி மயிலம்பாவெளி கிராமத்திற்கு.......

சமுர்த்தி திட்டத்தின் ஒரு பாரிய செயற்திட்டம் தான் சமுர்த்தி நிவாரண முத்திரை இவ்நிவாரண முத்திரையில் பணத்தை நான்கு விடயங்களுக்காக பிரித்து வழங்கி வருகின்றது அதன் அடிப்படையில் 3500 ரூபாய் சமுர்த்தி நிவாரணம் பெறும் சமுர்த்தி பயனுகரிக்கு பணமாக சமுர்த்தி வங்கியூடாக 3050 ரூபாவும்  கட்டாய சேமிப்பாக 300 ரூபாவும் இழப்புக்கள் ஏற்படும் போது அதன் காப்புறுதி பணமாக 100 ரூபாவும் வீடுகளை அமைத்துக் கொள்வதற்காக மாதாந்த அதிஸ்டலாப சீட்டிலுப்புக்கு 50 ரூபாவும்  அறவிட்டு வழங்குகிறது.
  இந்த வீட்டு லொட்டரி மூலம் மாதாந்தம் ஒரு பிரதேச செயலகத்திற்கு ஒரு வீடு தெரிவு செய்யப்பட்டு அவ்வதிஸ்டசாலிக்கு இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்படுகின்றது. இப்பயனுரிக்கு வீடு இல்லாத விடத்து வீடு அமைத்துக் கொள்ள முடியும் அல்லது காணி கொள்வனவு செய்து கொள்ளவும் முடியும். இம்மாதம் இவ்வதிஸ்டம் மயிலம்பாவெளி கிராமத்தின் சமுர்த்தி நிவாரணம் பெறும் சமுர்த்தி பயனுகரியான திருமதி.நேசம்மாவுக்கு அதிஸ்டம் கிடைத்துள்ளது.
இனிவரும் காலங்களில் ஒரு பிரதேச செயலகத்திற்கு இரண்டு வீடுகள் தெரிவு செய்யப்படவுள்ளது இதற்காக வீட்டு அதிஸ்டத்திற்காக 80 ரூபாய் மாதாந்தம் அறவிடப்படுவதுடன் வங்கியூடாக வழங்கப்படும் பணத்தில் இருந்து 30 ரூபாய் குறைப்புச்செய்யப்படவுள்ளதாகம் தெரிவிக்கப்படுகின்றது.

Comments