சமுர்த்தி பயனாளிகளுக்கு 6% வட்டியில் தனசவிய கடன்கள் வழங்கி வைப்பு....

சமுர்த்தி பயனாளிகளுக்கு 6% வட்டியில் தனசவிய கடன்கள் வழங்கி வைப்பு....

சமுர்த்தி நிவாரணம் பெறும் சமுர்த்தி பயாளிகளுக்கு தங்கள் கட்டாய சேமிப்பு பணத்தை பிணையாக வைத்து நாடுபூராவும் தனசவிய கடன்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
 அதன் வகையில் ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கியூடாக 80 சமுர்த்தி நிவாரணம் பெறும் சமுர்த்தி பயனுகரிகளுக்கு பதினையாயிரம் ரூபாய் தனசவிய கடன்கள் வழங்கி வைக்கப்பட்டது.
  சமுர்த்தி நிவாரணம் பெறும் பயானாளிகளுக்கு தங்கள் சமுர்த்தி முத்திரை வழங்கும் போது கட்டாய சேமிப்பிற்கேன 3550 ரூபாய் பெறுவோரிடம் 300 ரூபாவும் 2500 ரூபாய் பெறுவோரிடம் 200 ரூபாவும் 1500 ரூபாய் பெறுவோரிடம் இருந்து 100 ரூபாவும் 420 ரூபாய் பெறுவோவிடம் இருந்து 270 ரூபாவையும் அவர்களுக்கு வழங்கப்படும் முத்திரை பணத்தில் இருந்து அறவிட்டு சேமிக்கப்படகின்றது இத்தொகையை பிணையாக வைத்து தற்போது 15000 ரூபாய் சிறு தொழில்களுக்கென தனசவிய கடன் 6 வீத வட்டியில் வழங்கப்படுகின்றது.
 இக்கடனை ஊக்குவிக்கும் நோக்குடன் மயிலம்பாவெளி – தன்னாமுனை கிராம 80 சமுர்த்தி பயனுகரிகளுக்கு தனசவிய கடன்கள் வழங்கி வைக்கப்பட்டது. இதன் போது ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கி முகாமையாளர் திரு.செந்தூர்வாசன், வலய உதவியாளர் திரு.பகீரதன், கடன் லிகிதர் திருமதி.ஜெகனி ஆகியோர் உடனிருந்தனர். இதன் போது உரையாற்றிய முகாமையாளர் சமுர்த்தி வங்கி பல கடன் திட்டங்களை அறீமப்படுத்தி உங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த முயற்சிக்கின்றது தற்போது உங்களுக்கு  தனசவிய கடன் வழங்கப்படுகின்றது இதை ஒழுங்கான முறையில் செலுத்தி முடித்தால் மேலும் இதை விருத்தி செய்து உங்கள் தொழில் முயற்சியை மேம்படுத்தலாம். இதை தவிர தற்போது தனபிமானி எனும் ஒரு கடன் திட்டம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது மிக குறைந்த 08 வீத வட்டியில்  வழங்ப்படும் இக்கடனும் தங்கள் தொழில் முயற்சியை குழுவாக செயற்படுத்தும் வகையில் வழங்கப்படுவாக தெரிவித்தார்.







Comments