சமுர்த்தி சமூக அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் வேலைத்திட்டம் - 2019...

சமுர்த்தி சமூக அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் வேலைத்திட்டம் - 2019...

 இவ்வேலைத்திட்டத்தின் ஊடாக 2030ம் ஆண்டில் வறுமை நிலையற்ற சுபீட்சமற்ற இலங்கையை உருவாக்க சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் திகழ்கின்றது. இதை கருத்தில் கொண்டு 2017ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இவ்வேலைத்திட்டம் 2018ம் ஆண்டு சமூக அபிவிருத்தி  மற்றும் சுற்றாடல் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்க்பட்டன 2019ல் சமுர்த்தி பயனாளிகளின் உடல் உள நலத்தினை மேம்படுத்தும் வேலைத்திட்டம் தற்போது நாடு பூராவும் சமுர்த்தி சமூக அபிவிருத்தி மன்றத்தின் ஊடாக விழிப்புனர்வு செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
 இதன் ஒரு கட்டமாக ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி பிரிவால் நேற்றைய தினம் தொற்றா நோய் பற்றிய கலந்துரையாடலும் செயற்பாட்டு பரிசோதனையும் இடம்பெற்றன. அதன் தொடர் நிகழ்வாக இன்று 17.09.2019 போதைக்கு அடிமையானவர்களை இனம் கண்டு அதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கு ஏறாவூர் பற்று பிரதேச செயலக சபா மண்டபத்தில் இடம் பெற்றது. இதில் வளவாளராக உளநலவைத்திய அதிகாரி யூடி ஜெயக்குமார். கலந்து கொண்டு விரிவுரை வழங்கியதுடன் ஆலோசனைகளையும் மிக நகைச்சுவையுடன் வழங்கியிருந்தார். இதே வேளை மதுவில் இருந்து  முற்றாக விடுபட்ட சமுர்த்தி பயனாளிகளுடனும் கலந்துரையாடி அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இவ்வேலைத்திட்டத்தை ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் சி.தவநீதன் ஒழுங்கமைத்து நடாத்தியிருந்தார்.









Comments