மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கி முதலிடம்........

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கி முதலிடம்........

2019ம் ஆண்டிற்கான சித்திரை புதுவருட சேமிப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கி முதலிடத்தை பெற்றுள்ளது. வருடாந்தம் மக்களிடையே சேமிப்பை ஊக்குவிக்கும் நோக்குடன் இலங்கையில் உள்ள சகல வங்கிகளும் இச்சேமிப்பை செய்து வருகின்றது இதன் அடிப்படையில் சமுர்த்தி வங்கியும் வருடாந்தம் இச்சேமிப்பை செய்து வருகின்றது.
  மட்டக்களப்பு மாவட்டத்தில் 29 சமுர்த்தி வங்கிகள் இயங்கி வருகின்றன இதில் ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கி அதிகப்படியான 11564160 ரூபாவினை சேகரித்து முதலிடத்தையும், ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாவடிவேம்பு சமுர்த்தி வங்கி  8673661 ரூபாவினை சேகரித்து இரண்டாமிடத்தையும் அடுத்தடுத்து பெற்றுள்ளதுடன் மாவட்டத்தில் அதிகப்படியாக கிராம ரீதியாக சேகரிக்கப்பட்டதில் ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கிக்கு உட்பட்ட மயிலம்பாவெளி கிராமம் அதிகப்படியாக 3181210 ரூபாக்களை சேமித்து முதலாமிடத்தையும் பெற்றுக் கொண்டதுடன் ஏறாவூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 5 சமுர்த்தி உத்தியோகத்தர்கள் முதல் 10 இடங்களுக்குள் nதிhவாகியுள்ளனர்.
  எனவே முதலாமிடத்தை பெற அயராது உழைத்த  ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கி முகாமையாளர் திரு.செந்தூர்வாசன் அவர்களுக்கும் அவர் சார்ந்த வங்கி மற்றும் கள உத்தியோகத்தர்களுக்கும் இரண்டாமிடத்தை பெற அயராது உழைத்த மாவடிவேம்பு சமுர்த்தி வங்கி முகாமையாளர் திருமதி.சுதர்சினி அவர்களுக்கும் அவர் சார்ந்த வங்கி மற்றும் கள உத்தியோகத்தர்களுக்கும் எமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் nதிவித்து கொள்கின்றோம்.

Comments