2019 புகைத்தல் கொடி தினத்திற்க்காக 100 ரூபாய்.....

2019 புகைத்தல் கொடி தினத்திற்க்காக 100 ரூபாய்.....


மே 31 சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம் என பிரகடனப்படுத்தி வருடந்தோரும் பல செயற்பாடுகள் நாடளாவிய ரீதியில் நடாத்தப்படும் ஒரு விசேட தினமாகும். இத்தினத்தில் புகைத்தலை தடுக்கும் விதத்தில் பல எதிர்ப்பு நடவடிக்கைகளையும் புகைத்தல் மூலம்  ஏற்படும் பாதிப்புக்கள் பற்றி விழிபபுனர்வை ஏற்படுத்தும் நிகழ்வுகள் பல நடைபெறும்.
இலங்கை பொறுத்த மட்டில்  சமுர்த்தி பிரிவு இப் புகைத்தல் எதிர்ப்பு தினத்தை ஒரு விசேட தினமாக பல ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தி வருகின்றது. அன்றைய தினத்தை குறிக்கும் முகமாக ஒரு  புகைத்தல் எதிர்ப்பு கொடியினை மக்கிடையே விற்பனை செய்வதன் மூலமாக பணம் சேகரிக்கப்பட்டு அப்பணத்தில் வறிய குடும்பங்களை சார்ந்த குடும்பங்களின் வீட்டு நிலையை உயர்த்துதல், மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களுக்கு உதவி செய்தல், பாரிய நோய்களில் வாடுவோருக்கு மருத்துவத்திற்கு உதவிகள் செய்தல் போன்ற விடயங்கள் மேற் கொள்ளப்படும். இக்கொடி விற்பனை இச்சேமிப்பை இவ்வருடம் ஒரு மாத காலத்திற்கு நடைபெறவுள்ளதாக அறியப்படுகின்றது.
  இச்செயற்பாடுகளை அக்கிராமத்தில் இயங்கும் ஒவ்வொரு சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பும் முன்னிற்று நடாத்துகின்றது இவற்றை கண்கானிப்பவராக இக்கிராமத்தின் சமுர்த்தி உத்தியோகத்தர் செயற்படுவார் எனவும் தெரிவிக்கப்டகின்றது. 
இவ்வருடத்தில் மயிலம்பாவெளி – தன்னாமுனை கிராமத்தில் இயங்கும் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்கள் தாம் ஒவ்வொருவரும் 100 ரூபாவினை சேமிப்பதாகவும் மேலதிகமாக வசதிபடைத்த மக்களிடையே சேமித்து தங்கள் அமைப்பில் உள்ளவர்களுக்கு உதவப்போவதாகவும் தெரிவித்துள்ளார்கள். இதற்கான உண்டியல்களை தயாரித்து வலய முகாமையாளரிடம் தாம் ஒப்பமிட்டு பெற்றுக் கொண்டதாவும் தெரிவிப்பதுடன் முடிவடையும் தினத்தில் தாமே இவ்வுண்டில்களை வங்கியில் ஒப்படைக்கவுள்ளதாகவும் இதற்காக எங்களது சமுர்த்தி முகாமையாளர் மற்றும் சமுர்த்தி கள உத்தியோகத்தர் தமக்கு சிறப்பான உத்துழைப்பை வழங்குவதாகவும் குறியுள்ளனர்.

சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் பார்வையிட -www.jeyasdo.comமட்டு மாவட்ட சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் அறிவிக்க - Email - jeyasdo@gamil.com

Comments