இன்று சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம்....

இன்று சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம்....

மே 31 ஆகிய இன்று சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம் உலகளாவிய ரீதியில் நடைபெறுகின்றது. இலங்கையைப் பொறுத்தவரை இப்புகைத்தல் எதிர்ப்பு தினத்தை சமுர்த்தி பிரிவு ஒரு பாரிய செயற்திட்டமாக பல வருட காலமாக செய்து வருவதை நாம் அவதானிக்க கூடியதாகவுள்ளது. இதனை கருத்திற் கொண்டு மக்களுக்கு விழிப்புனர்வை ஏற்படுத்தும் முகமாக கொடிவிற்பனை, எதிர்ப்பு பதாதைகள் வெளியிடுதல், துண்டு பிரசுரங்கள் வெளியிடுதல் போன்ற விடயங்களை செய்து வருகின்றது;.
  இதில் முக்கிய விடயம் என்னவென்றால் சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தில் சமுர்த்தி பிரிவின் மூலம் கொடிவிற்பனை ஒன்று மே 31 அன்று ஆரம்பிக்கப்பட்டு இதன் மூலம் சேகரிக்கப்படும் பணம் இக்கிராமத்தில் வாழும் வறிய குடும்பங்களில் உள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கை, இக்கிராமத்தில்  பாரிய நோய்களில் வாடும் குடும்பங்களுக்கான நிதியுதவிகள், இக்கிராமத்தில் வாழும் வீடு அற்றவர்களுக்கான வீடுகளை அமைத்தல் மற்றும்  புதுப்பித்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு இப்பணம் செலவிடப்படுவதாக ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் சி.தவநீதன் தெரிவிக்கின்றார்.
  இதற்கான நிகழ்வுகள் இன்று 31.05.2019 ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கியில் நடைபெற்றது முதல் கொடியினை ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கி முகாமையாளர் நடராசா செந்தூர்வாசனுக்கு சவுக்கடி கிரம சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் தலைவி வழங்கி ஆரம்பித்து வைத்தார். இதன் போது கருத்து தெரிவித்த முகாமையாளர் இச்சேமிப்பு நடவடிக்கையை ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கியில் பதிவு செய்யப்பட்ட சகல சமுர்த்தி சமுதாய அடிப்படை அடைப்புக்களே மேற் கொள்ளும் எனவும் இரண்டு வார கால சேமிப்பை இவர்கள் சேமிப்பு இதை அவர்களே வங்கியில் ஒப்படைப்பார்கள் எனவும் கள சமுர்த்தி உத்தியோகத்தர்கள் அதனை மேற்பார்வை செய்பவர்களாக இருப்பார்கள் என தெரிவித்தார்.
  இந்நிகழ்வின் போது தன்னாமுனை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் சந்திரகாசன் ஜொலினாமாரி சவுக்கடி சமுர்த்தி உத்தியோகத்தர் S.தனலட்சுமி தளவாய் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் N.சிவராசா வலய உதவியாளர் நாகராசா பகீரதன் ஆகியோர் கலந்து கொண்டனர்












Comments