கள சமுர்த்தி உத்தியோகத்தர்கள் இல்லையேல் சமுர்த்தி வங்கி இல்லை ........

கள சமுர்த்தி உத்தியோகத்தர்கள் இல்லையேல் சமுர்த்தி வங்கி இல்லை ........
.
2019 சித்திரை புதுவருட சேமிப்பில் அதிக சேமிப்பு செய்த கள சமுர்த்தி உத்தியோகத்தர்களை ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கியில் கௌரவிக்கப்பட்ட நிகழ்வின்  போது சமுர்த்தி  முகாமையாளர் நடராசா செந்தூர்வாசன் கள சமுர்த்தி உத்தியோகத்தர்கள் இல்லையேல் சமுர்த்தி வங்கி இல்லை என தெரிவித்தார்.  இவரது தலைமையில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில் ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி கருத்திட்ட முகைமையாளர் திரு.கலாதேவனும் கலந்து கொண்டார்.
 தொடர்ந்து உரையாற்றிய முகாமையாளர் வருடந்தோரும் நடைபெறும் இச்சேமிப்பில் சேகரிக்கப்படும் பணம் அனைத்தும் சமுர்த்தி பயனுகரிகளின் கணக்குகளிலேயே வைப்புச் செய்யப்படுவதாக தெரிவித்தார். இதற்காக என் கள சமுர்த்தி உத்தியோகத்தர்கள் சிறப்பாக செயற்பட்டுள்ளார்கள் இவர்களுடன் வங்கி ஊழியர்களும் இரவு பகல் பாராது தமது பங்களிப்பை செய்துள்ளார்கள் எனவும் தெரிவித்தார். எனக்கு இது புதிய வங்கி பல சமுர்த்தி கள உத்தியோகத்தர்களுக்கும் இது புது கிராமம் அவர்கள் வருகை தந்த இந்த ஆறு மாதத்தில் இப்பாரிய சாதனையை  செய்த இவர்களை என்னால் பாராட்டாமல் இருக்க முடியாது என கூறினார்.
  இந்நிகழ்வில் கலந்து கொண்ட  சமுர்த்தி கருத்திட்ட முகைமையாளர் திரு.கலாதேவன் உரையாற்றுகையில் சமுர்த்தி வரலாறு பற்றி கூறியதுடன் சிறுக சிறுக சேமிப்பு உங்கள் கடைசி காலத்தில் பெரிதாக உதவும் என்றார். இந்நிகழ்வில் ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கிக்கட்டுப்பாட்டுச்சபை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வங்கி ஊழியர்கள் மற்றும் சமுர்த்தி கள உத்தியோகத்தர்கள் வலய உதவியாளர் நாகராசா பகீரதன் ஆகியோர் கலந்து கொண்டனர்
  அதிக சேமிப்பை செய்து முதலாமிடத்தை பெற்ற மயிலம்பாவெளி சமுர்த்தி உத்தியோகத்தர் பா.ஜெயதாசன் இரண்டாமிடத்தை பெற்ற ஐயங்கேணி சமுர்த்தி உத்தியோகத்தர் கே.கஜேந்திரன் மூன்றாமிடத்தை பெற்ற ஆறுமுகத்தான் குடியிருப்பு - 02 சமுர்த்தி உத்தியோகத்தர் ஜெ.ஜெயதீஸ்வரி ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழும் பரிசில்களும் வழங்கப்பட்டதுடன் சேமிப்பு செய்த சகல கள சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
  இவ்வாறு உத்தியோகத்தர்களை ஊக்கப்படுத்தி பாராட்டிய ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கி முகாமையாளர் நடராசா செந்தூர்வாசைன தாம் பாராட்டுவதாக கள உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.








Comments