கடன்களை மாதாந்தம் அறவிட்டு வறிய மக்களின் வாழ்வாதாரத்தில் உயர்த்துவோம் ..........

கடன்களை மாதாந்தம் அறவிட்டு வறிய மக்களின் வாழ்வாதாரத்தில் உயர்த்துவோம் ..........

கடன்களை மாதாந்தம் அறவிடுவதுடன் அவர்களின் முன்னேற்றங்களை கண்டறிந்து தேவையான ஆலோசனைகளை வழங்கி அவர்களின்  வாழ்வாதாரத்தை முன்னேற்ற எனது ஆறுமுகத்தான் குடியிருப்பு வலய கள சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கி முகாமையாளர் நடராசா செந்தூர் வாசன் எல்லை நகர் சமுர்த்தி பயனுகரிகளுக்கு கடன்களை வழங்கி வைக்கும் போது தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் நீங்கள் ஒரு தொழில் முயற்சிக்காக தான் இன்று கடன் பெற வந்துள்ளீர்கள் இப்பணத்தை தொழில் முயற்சிக்கே பயன்படுத்த வேண்டும் வீடு அமைக்க கடன் தேவையாயின் அதற்கான கடன்களும் உண்டு என்னென்ன விடயங்களுக்கு கடன் பெற்றாலும் அவ்விடயத்தையே தான் நீங்கள் செய்ய வேண்டும் இனி கள சமுர்த்தி உத்தியோகத்தர்கள் உங்கள் தொழில் முயற்சியை பார்வையிடுவதுடன் உங்கள் கடன் அறவீடுகளையும் உன்னிப்பாக கவனிப்பார்கள் என்பதை உங்களுக் தெளிவாக கூறுவதாக தெரிவித்தர். இதன் போது எல்லைநகர் கிராமத்தின் 12 சமுர்த்தி பயனுகரிகளுக்கு கடன்கள் வழங்கி வைக்கப்பட்டன

  இந்நிகழ்வில் வலய உதவியாளர் நாகராசா பகீரதன்இ உல்லைநகர் கிராம சமுர்த்தி உத்தியோகத்தர் கே.கஜேந்திரன் ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கி கடன் லிகிதர் ஜெகனி சுந்தரகோஸ் ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கி காசாளர் பத்தியன் சிறிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் பார்வையிட -www.jeyasdo.com
மட்டு மாவட்ட சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் அறிவிக்க - 
Email - jeyasdo@gamil.com



Comments