மகளிர் தினத்தில் மகளிர் செய்த சாதனை.....


மகளிர் தினத்தில் மகளிர் செய்த சாதனை....
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மயிலம்பாவெளி-தன்னாமுனை சமுர்த்தி சங்கங்கள் இணைந்து நடாத்திய இரத்ததான நிகழ்வில் 40 கொடையாளிகள் தங்கள் உதிரத்தை கொடுத்து இன்னோர் உயிர் வாழ உதவி செய்தனர்.; இதில் முக்கிய விடயம் என்னவென்றால் 90 சதவிகிதமான கொடையாளிகளாக மகளிர் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளனர். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையுடன் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையும் இணைந்து இப்பணியில் ஈடுபட்டது. இப்பணியில் தம் சேவையை வழங்கியவைத்தியர்  கருத்து தெரிவிக்கையில்; தாங்கள் பல இடங்களில் இரத்ததான நிகழ்வில் கலந்து கொண்டதாகவும்  ஆனால் இன்று இங்கு பெண்கள் மிக ஆர்வமாக இரத்தான நிகழ்வில் கலந்து கொண்டதை பார்க்கும் போது ஆச்சரியமாகவுள்ளதாக தெரிவித்தார். இவர்களுக்கு இரத்ததானம் பற்றிய விழிப்புனர்வு சிறப்பாக வழங்கப்பட்டுள்ள இவர்களுடன் கலந்துரையாடும் போது தான் அறிந்து கொண்டாதாக குறிப்பிட்டார். மேலும் கருத்து தெரிவிக்கையில் பல மகளிர் வந்து தங்கள் உடல் நிலையால் இரத்ததான வழங்க முடியாதே என வேதனை பட்டு செல்வதையும் தான் அவதானித்ததாகவும் தெரிவித்தார்.
  மகளிர் தினமாகிய இன்று காலை 9 மணி தொடக்கம் 1மணிவரை மயிலம்பாவெளி சமுர்த்தி அலுவலர் அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்வில் ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திரு.பிறைசூடி  ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.தவநீதன் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் தலைவர் திரு.சடாற்சரராஜா ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் திரு.புவிதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வுக்கு கோட்டைமுனை விளையாட்டு கழகம் அனுசரனை வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
செய்திகள் - சமுர்த்தி ஜெயா
சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் பார்வையிட -www.jeyasdo.com
மட்டு மாவட்ட சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் அறிவிக்க - Email - jeyasdo@gamil.com






Comments