சமுர்த்தி சங்கங்கள் நடாத்தும் இரத்ததான நிகழ்வு.....

சமுர்த்தி சங்கங்கள் நடாத்தும்  இரத்ததான நிகழ்வு.....

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மயிலம்பாவெளி-தன்னாமுனை சமுர்த்தி சங்கங்கள் இணைந்து இரத்ததான நிகழ்வொன்றை மார்ச் - 8 அன்று நடாத்தவுள்ளது இந்நிகழ்வுக்கு கோட்டைமுனை விளையாட்டு கழகம் அனுசரனை வழங்கவுள்ளது.
 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பல நிகழ்வுகள் அன்றைய தினம் பல இடங்களில் நடைபெறவுள்ளது இந்த மார்ச்-08 அன்று மயிலம்பாவெளி-தன்னாமுனை கிராமங்களில் உள்ள சமுர்த்தி சங்கங்கள் இணைந்து ஒரு இரத்ததான நிகழ்வை நடாத்தவுள்ளது. இந்நிகழ்வுக்கு கோட்டைமுனை விளையாட்டு கழகம் பூரண அனுசரனை வழங்கவுள்ளது. சமுர்த்தி திட்டத்தில் சர்வதேச தினங்களை அனுஸ்டிப்பது வழமையான விடயமாகும் அதன் நிமித்தம் இக்கிராமங்களில் இயங்கும் 15 சமுர்த்தி சங்கங்களும் இணைந்து இந்த இரத்ததான நிகழ்வை நடாத்த திட்டமிட்டுள்ளனர்.
 தற்போது மட்டக்களப்பு இரத்த வங்கியில் இரத்தம் தட்டுப்பாடு நிலவுவதால் முடிந்தவரை இரத்ததான நிகழ்வில் கலந்து கொண்டு இரத்ததானம் செய்யுமாறு அனைவரையும் இச்சங்கங்களின் தலைவிகள் அன்பு வேண்டு கோள் விடுத்துள்ளனர். ஒரு துளி இரத்தம் கொடுத்து ஒரு உயிரை காப்பாற்ற நாமும் முன்வருவோம். ஏதிர்வரும் 08ம் திகதி மயிலம்பாவெளி சமுர்த்தி அலுவலர் அலுவலகத்தில் காலை 9மணி தொடக்கம் மதியம் 2மணி வரை இந்நிகழ்வு இடம்பெறும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்
 ஒரு துளி இரத்தம் கொடுத்து ஒரு உயிரை காப்பாற்றுவோம்

Comments