சமுர்த்தி வங்கியால் முன்னேறும் சமுர்த்தி குடும்பம்.....



சமுர்த்தி வங்கியால் முன்னேறும் சமுர்த்தி குடும்பம்.....
சமுர்த்தி திட்டத்தில் இனைந்து சமுர்த்தி வங்கியூடாக கடன் பெற்று பல குடும்பங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளது அதில் ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கியில் மூன்று லட்சம் ரூபாய் கடன் பெற்று மயிலம்பாவெளி கிராமத்தில் வசிக்கும் சமுர்த்தி பயனுகரி குடும்பமான திருமதி.சுஜித்குமார் நதியா சிறுகைத்தொழிலை செய்து வருகின்றார்.
சிறுகைத்தொழிலாக ஈக்கிள்தடி உற்பத்தியை 5வருடங்களாக செய்து முன்னேற்றம் அடைந்து வருகின்றார். இதற்கான பிரதான மூலப்பொருளான ஈக்கிளை குருநாகலில் இருந்து கொண்டு வருவதாகவும் கம்புகளை காடுகளில்  வெட்டுவதாகவும் தேவைப்படும் தகரத்தை பாவித்து கழிக்கப்படும் மீன் டின்ககை சேமிப்பதன் மூலம் இத்தொழிலை மேற்கொள்வதாகவும் குறிப்பிடுகின்றார். இவைகளை பாதுகாக்க ஒரு இடவசதி தான் தமக்கு தேவைப்படுவதாகவும் இதற்கான உதவிகளை சமுர்த்தி செய்யுமானால் தாம் இத்தொழிலை விஸ்தரித்து நாடுபூராவும் சந்தைப்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கின்றார்.
   இவருக்கான மேலும் பல உதவிகனை செய்ய ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கி ஆலோசனை செய்து வருவதாக வலய வங்கி முகாதையாளர் திருமதி.த.சியாந்தினி தெரிவித்தர்.

செய்திகள் - சமுர்த்தி ஜெயா
சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் பார்வையிட -www.jeyasdo.com


மட்டு மாவட்ட சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் அறிவிக்க - Email - jeyasdo@gamil.com

Comments