எம்மை விட்டு பிரிந்தார் ஆனந்தன்.......

எம்மை விட்டு பிரிந்தார் ஆனந்தன்.......

ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றிய கறுவல்தம்பி அருளாணந்தம் (ஆனந்தன்) 2018.11.18 அன்று எம்மைவிட்டும் இப்பூவுலகை விட்டும் பிரிந்தார். இவர் 1998ம் ஆண்டு முதல் சமுர்த்தி உத்தியோகத்தராக ஈரளக்குள கிராமத்தில் கடமைபுரிந்து தற்போது வந்தாறுமூலை கிழக்கு கிராம சமுர்த்தி உத்தியோகத்தராக கடமையாற்றி இறைவனடி சேர்ந்துள்ளார் இரண்டு பிள்ளைகளின் தந்தையாகிய இவர் கடந்த ஒரு வருட காலமாக நோயினால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும். இவர் ஆரம்ப காலங்களில் ஒரு புகைப்பட கலைஞராக தன் பணியை தொடர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.


Comments