சமுர்த்தி உத்தியோகத்தருக்கு விடை கொடுத்த மக்கள்....

சமுர்த்தி உத்தியோகத்தருக்கு விடை கொடுத்த மக்கள்....

 வேப்பவெட்டவான் கிராமத்தில் கடமையாற்றி இடமாற்றலாகி செல்லும் சமுர்த்தி உத்தியோகத்தரான பா.ஜெயதாஸன் அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வை வேப்பவெட்டுவான் மாவடிஓடை கர்ணன் சமுர்த்தி சங்கம் 26.10.2018 அன்று நடாத்தியது.
    சங்கத்தலைவி தி.அழகுசௌந்தரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இக்குக்;கிராமத்தில் வசிக்கும் சமுர்த்தி நலன்பெறும் குடும்பங்களின் தலைவிகள் கலந்து தங்கள் உத்தியோகத்தரை வாழ்த்தி பிரியாவிடை நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இலுப்படிச்சேனை சந்தியில் இருந்து 10 கிலோ மீட்டருக்கு அப்பால்  இருக்கும் மாவடிஓடை குக்கிராமத்தில் 40 குடும்பங்கள் நிரந்தரமாக வசித்து வருகின்றனர். பெரும்பாலும் பயிர்செய்கையையும் செங்கல் உற்பத்தியையும் செய்து தம் வாழ்வாரத்தை உயர்த்தும் இம்மக்களுக்கு சமுர்த்தி வங்கி மூலம் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.



Comments