எல்லைநகர் கிராமத்தில் சிறுவர்தின நிகழ்வு.........

எல்லைநகர்  கிராமத்தில் சிறுவர்தின நிகழ்வு......... 

சர்வதேச சிறுவர் தினம் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி நடைபெற்றாலும் இம்மாதங்கள் முழுவதும் நாடு பூராகவும் சிறுவர் தின நிகழ்வுகள் நடைபெற்றவன்னமே உள்ளன. இதன் அடிப்படையில் ஏறாவூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட எல்லைநகர் கிராமத்தில் சமுர்த்தி சங்கங்கள் இணைந்து சிறுவர் நிகழ்வை அன்மையில் சிறப்பாக நடாத்தியிருந்தது.
ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கி முகாமையாளர் கே.சியாந்தினி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எஸ்.ஜெயராஜ் அவர்கள் கலந்து கொண்டு பரில்களை வழங்கிவைத்தார். இந்நிகழ்வில் எல்லைநகர்  கிராம உத்தியோகத்தர் ஜெ.லக்சாயினி எல்லைநகர்  பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.மனோண்மணி ஏறாவூர் நகரசபை உறுப்பினர்களான ந.சுதாகரன் மற்றும் க.பிரபாகரன் அவர்களும்  குமாரவேலியார் சித்தி விநாயகர் வித்தியாலய அதிபர் மணிவண்ணன் சுதாகரி அவர்களும் எல்லைநகர்  கிராம அபிவிருத்தி சங்க தலைவர் த.கேதீஸ்வரன் அவர்களும் கலந்து சிறப்பித்து இருந்தனர். இந்நிகழ்வை எல்லைநகர் சமுர்த்தி உத்தியோகத்தர் தியாகராஜா டிலக்சி ஒழுங்கமைத்த நடாத்தி இருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.







Comments