போதையில் இருந்து விடுபட்ட நாடு விழிப்புனர்வு கருத்தரங்கு.....

போதையில் இருந்து விடுபட்ட நாடு விழிப்புனர்வு கருத்தரங்கு.....

மக்களை போதையில் இருந்து விடுபடுவதற்காக இலங்கையில் பல செயற்திட்டங்களை அரசாங்கம்  முன்னெடுத்து வருகின்ற போதிலும் சமுர்த்தி திணைக்களமும் இதற்கான பல வேலைத்திட்டங்களை செய்து வருகின்றது. அதற்கமைய ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி மன்றமும் பல விழிப்புனர்வு கருத்தரங்குகளை பாடசாலை மட்டம் கிராம மக்கள் மத்தியிலும் செயற்படுத்தி வருகின்றது.
  இதன் ஒரு கட்டமாக கொம்மாதுறை வடக்கு கொம்மாதுறை கிழக்கு கிராம மக்களுக்கான போதையில் இருந்து விடுபட்ட நாடு  எனும் லைப்பில் ஒரு விழிப்புனர்வு கருத்தரங்கு ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் செ.ஜெயராஜா தலைமையில் 2018.08.08 அன்று கொம்மாதுறை சமூக  மண்டபத்தில் நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு வளவாளராக கல்குடா கல்வி வலய தொழில் வழிகாட்டல் உளவளத்துனை உத்தியோகத்தர் த.விஸ்வஜித்தன் விரிவுரையாளராக செயற்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இககருத்தரங்கில் சமுர்த்தி உத்தியோகத்தர்களான திருமதி.சிறிபாலு பாஸ்கரதேவி திருமதி.செ.விஜிதா திரு.குணராசா ஆகியோர் கலந்து கொண்டனர் என ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் சி.தவநீதன் தெரிவித்தார்.

செய்திகள் - சமுர்த்தி ஜெயா
சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் பார்வையிட -www.jeyasdo.com
மட்டு மாவட்ட சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் அறிவிக்க - Email - jeyasdo@gamil.com











Comments