சிறந்த மாதிரி வீட்டுத்தோட்ட வேலைத்திட்டம் இன்று மாவடிவேம்பில் ஆரம்பம்........

சிறந்த மாதிரி வீட்டுத்தோட்ட வேலைத்திட்டம் இன்று மாவடிவேம்பில் ஆரம்பம்........

2018ம் ஆண்டிற்கான சமுர்த்தியின் சிறந்த மாதிரி வீட்டுத்தோட்டம் - சிறந்த கமக்காரர் இல்லத்திற்கான வேலைத்திட்டத்தை மாவடிவேம்பு சமுர்த்தி வங்கியில் ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் திருமதி.ரதிதேவியால் தொடக்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தில் சமுர்த்தி உத்தியோத்தர்களின் இல்லத்திலும் வீட்டுத் தோட்டத்தை ஊக்குவிப்பதுடன் சமுர்த்தி வங்கிகள் அலுவலகங்கள் என்பனவற்றிலும் தோட்டங்களை உருவாக்கும் வேலைத்திட்டத்திற்கமைய இவ்வேலைத்திட்டம் 26.07.2018 ஆரம்பித்துவைக்கப்பட்டது.
 போட்டி அடிப்படையில் நடைபெறும் இவ்வீட்டுத்தோட்டத்திற்கு ஒரு கிராமசேவகர் பிரிவுக்கான ஒரு வீட்டுத்தோட்ட கமக்காரருக்கு 5000 ரூபாய் பெறுமதியான நாற்று விதைகள் மரங்கள் வழங்கப்படவுள்ளதாகவும்  சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு 100 ரூபாய் பெறுமதியான நாற்று விதைகளும் அலுவலங்களுக்கு 200 ரூபாய் பெறுமதியான நாற்று விதைகளும் வழஙகப்படவுள்ளதாகவும்  கருத்திட்ட முகாமையாளர் திருமதி.ரதிதேவி தெரிவித்ததுடன் பிரதேச செயலகம் சார்பாக வெற்றிபெறும் மூன்று சிறந்த மாதிரி வீட்டுத் தோட்டத்திற்கு 15000 ரூபா விதமும் பிரதேச செயலகம் சார்பாக வெற்றிபெறும் மூன்று சிறந்த தைரியமான விவசாயிகளுக்கு 15000 ரூபா விதமும்  பரிசில்கள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவடிவேம்பு சமுர்த்தி வங்கி முகாமையாளர் திருமதி.சுதர்சினி ஜெகன் ஜீவராஜ் வங்கி கட்டுப்பாட்டு சபை தலைவி சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் வலய உதவியாளர் திரு.குணராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்திகள் - சமுர்த்தி ஜெயா
சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் பார்வையிட -www.jeyasdo.com
மட்டு மாவட்ட சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் அறிவிக்க - Email - jeyasdo@gamil.com








Comments