ஏறாவூர் பற்று சமுர்த்தி மகா சங்கத்தால் மேலும் இரண்டு பத்து லட்சம் இசுறு கடன்கள் வழங்கி வைப்பு...

ஏறாவூர் பற்று சமுர்த்தி மகா சங்கத்தால் மேலும் இரண்டு பத்து லட்சம் இசுறு கடன்கள் வழங்கி வைப்பு...

சமுர்த்தி திட்டத்தில் வறிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் செயற்பாடவே மக்களுக்கு சமுர்த்தி வங்கி கடன்களை வழங்கி வருகின்றது. ஒரு சமுர்த்தி பயனுகரி தனக்கே உரிய ஒரு தொழிலை ஆரம்பிக்க 50000 ரூபாய் கடனில் ஆரம்பித்து படிப்படியாக அத்தொழில் முன்னேற்றம் அடைந்து வர தன் கடனின் அளவையும் அதிகரித்தே கொண்டு செல்வர் இவ்வாராக இங்கு இரண்டு சமுர்த்தி பயனுகரிகள் 50000 ரூபாய் பெற்று அதை சிறப்பாக செலுத்தி முடித்ததுடன் மீண்டும் ஒரு லட்சம் கடன் பெற்று அதனையும் சீராக செலுத்தி தன் தொழிலையும் மேம்படுத்தி அதன் பின் ஐந்து லட்சம் பெற்று அதனையும் சிறப்பாக செலுத்தி தற்போது பத்து லட்சம் கடன் பெற்று தம் சுய காலில் அவர்கள் நிற்கும் தைரியத்தை இச்சமுர்த்தி திட்டம் செய்துள்ளது. இதன் அடிப்படையில் ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி மகா சங்கம் 20.06.2018 இரண்டு பத்து லட்சம் இசுறு கடனை களுவங்கேணி-01 கிராசேவகர் பிரிவை சேர்ந்த திருமதி.மகேந்திரன் சசிகலாவிற்கும் களுவங்கேணி-02 கிராசேவகர் பிரிவை சேர்ந்த திருமதி.ரஜனிகுமார் விஜிதாவிற்கும் வழங்கப்பட்டது.

களுவங்கேணி-01 கிராமத்தை சேர்ந்த திருமதி மகேந்திரன் சசிகலா 2010ம் ஆண்டு சமுர்த்தியில் இணைந்து மாவடிவேம்பு சமுர்த்தி வங்கியூடாக முதல் கடனாக ஐம்பதாயிரம்  ரூபாய் பெற்று தன் கனவரின் மீன்பிடி தொழிலுக்கு உதவியுள்ளார் அதன் பின் ஒருலட்சம்; கடன் பெற்று ஒரு வள்ளத்தை கொள்வணவு செய்தார். அதன் பின் மகா சங்கத்தின ஊடாக ஐந்த லட்சம் ரூபாய் கடன் பெற்று தன் கணவரின் தொழிலை மேலும் விஸ்தரிக்க உதவினார்  தற்போது பத்து லட்சம் ரூபாய் கடன் பெற்று தன் கணவர் ஒரு இயந்திர படகிற்கே சொந்தக்காரன் என்பதை மிக மகிழ்சியுடன் தெரிவிக்கின்றார்.  இவர் தான் ஒரு சமுர்த்தி முத்திரை பெறும் பயனுகரி என்றும்  தான் சமுர்த்தி திட்டத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளதால் தனக்கு இனி இம்முத்திரை வேண்டாம் அதை தான் ஓப்படைக்கவுள்ளதாகவும் அதை ஒரு வறிய குடும்பத்திற்கு வழங்கி அவரையும் முன்னேற்ற வேண்டும் என தெரிவித்ததுடன் தாம் முன்னேற உதவி சமுர்த்தி உத்தியோகத்தர் திருமதி.லோகநாதன் யோகேஸ்வரிக்கும்  சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் மகா சங்க உத்தியோகத்தர்களுக்கும் நன்றி கூறியனார். இவருக்கான கடனை ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் திருமதி.ரதிதேவி வழங்கி வைத்தார்.




களுவங்கேணி-02 கிராமத்தை சேர்ந்த திருமதி ரஜனிகுமார் விஜிதா  2011ம் ஆண்டு சமுர்த்தியில் இணைந்து மாவடிவேம்பு சமுர்த்தி வங்கியூடாக முதல் கடனாக ஐம்பதாயிரம்  ரூபாய் பெற்று தன் கணவரின் சிறு கடை தொழிலுக்கு உதவியுள்ளார் பின் ஒருலட்சம்; கடன் பெற்று சிறு கடையை கடையாக மாற்றினார். அதன் பின் மகா சங்கத்தின ஊடாக ஐந்த லட்சம் ரூபாய் கடன் பெற்று தன் கணவரின் கடையை விஸ்தரிக்க பிரதான வீதியில் ஒரு கடையை பெற்று மேலும் முன்னேற்றம் கண்டார்.  தற்போது பத்து லட்சம் ரூபாய் கடன் பெற்று தன் கணவர் ஒரு கடையை நடாத்துவதற்கும் தான் ஒரு கடையை வீட்டுடன் நடாத்துவதற்கும் இச்சமுர்த்தி திட்டம் உதவியதை  மிக மகிழ்சியுடன் தெரிவிக்கின்றார்.    தான் சமுர்த்தி திட்டத்தால் முன்னேற்றம் அடைந்துள்ளதை போன்று மற்றவர்களும் தொழில் செய்வதற்காக கடன் பெற்று முன்னேறுமாறும் தெரிவித்தார். தான்; முன்னேற உதவி சமுர்த்தி உத்தியோகத்தர் திருமதி.லோகநாதன் யோகேஸ்வரிக்கும்  சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் மகா சங்க உத்தியோகத்தர்களுக்கும் நன்றி கூறியனார். இவருக்கான கடனை ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி மகா சங்க உதவி முகாமையாளர் திரு.மணிவண்ணன் வழங்கி வைத்தார்.

செய்திகள் - சமுர்த்தி ஜெயா
சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் பார்வையிட -www.jeyasdo.com
மட்டு மாவட்ட சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் அறிவிக்க - Email - jeyasdo@gamil.com

Comments