ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வலயத்தில் நடைபெற்ற சமுர்த்தி சிறுவர் கழகங்களுக்கான கலை கலாசார போட்டிகள் ....

   ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வலயத்தில் நடைபெற்ற சமுர்த்தி சிறுவர் கழகங்களுக்கான கலை கலாசார போட்டிகள் ....

2018 ம் ஆண்டிற்கான சமுர்த்தி சிறுவர் கழகங்களுக்கான கலை கலாச்சார போட்டிகள் ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வலயத்தில் வலய முகாமையாளர் திருமதி.சியாந்தினி கமல்ராஜ் தலைமையில் நடைபெற்றது இப்போடிகளுக்கு வலயத்திற்குட்பட்ட கிராம சேவகர் பிரிவில் இருந்தும் சமுர்த்தி சிறுவர் கழகங்களாக பதிவு செய்த கழகத்தை சார்ந்த சிறுவர்கள் போட்டியில் பங்குபற்றியது குறிப்பிடத்தக்க விடயமாகும். இப்போட்டிகளுக்கு திருமதி சிவஜோதிராணியும் அவர்களும்  திருமதி.ஆ.யு.அவுட்கோன் அவர்களும் நடுவர்களாக செயற்பட்டனர். சிறுவர்களுக்கான போட்டியான நாட்டார் பாடல், பேச்சு, ஓவியம், சிறுகதை, அறிவிப்பு, நடனம், நாடகம் போன்றறவற்றில் முதலிடத்தை பெற்ற சிறுவர்கள் பிரதேச செயலக மட்ட போட்டிகளில் கலந்து கொள்வர்கள்; என ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வலய உதவியாளர் திருமதி.சிவஜோதி அழகேந்திரன் தெரிவித்தர்.
செய்திகள் - சமுர்த்தி ஜெயா
சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் பார்வையிட -www.jeyasdo.com
மட்டு மாவட்ட சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் அறிவிக்க - Email - jeyasdo@gamil.com














Comments