போதையை ஒழித்து நாட்டை கட்டியெமுப்புவோம்.....
சமுர்த்தி திட்டத்தில் போதை ஒழிப்பு ஒரு பாரிய வேலைத்திட்டமாக காணப்பட்ட போதிலும் தற்போதைய அரசாங்கம் இதை தடுப்பதில் மும்முரமாக செயற்பட்டு வருவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. ஒவ்வொரு வருடமும் மே-31 புதைத்தல் எதிர்ப்பு போதை எதிர்ப்பு தினமாக உலக நாடுகளில் கடைப்பிடித்து வந்தாலும் சமுர்த்தி திணைக்களம் இம்மாதத்தை புதைத்தல் எதிர்ப்பு போதை எதிர்ப்பு மாதமாக பிரகடனப்படுத்தி பல்வேறு நிகழ்வுகளை நாடு பூராவும் நடாத்தி வருகின்றன .அதன் அடிப்படையில் ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் புதைத்தல் எதிர்ப்பு போதை எதிர்ப்பு பேரணி 16.06.2018 அன்று சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எஸ்.ஜெயராஜ் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது இந்நிகழ்வில் ஏறாவூர் பற்று பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் அ.கருணாகரன் அவர்களும் கணக்காளர் யே.ஜோச் ஆனந்தராஜா அவர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் மற்றும் சமுர்த்தி பயனுகரிகள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டதாக ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் சி.தவநீதன் தெரிவித்தார்.
செய்திகள் - சமுர்த்தி ஜெயா
சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் பார்வையிட -www.jeyasdo.com
மட்டு மாவட்ட சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் அறிவிக்க - Email - jeyasdo@gamil.com
சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் பார்வையிட -www.jeyasdo.com
மட்டு மாவட்ட சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் அறிவிக்க - Email - jeyasdo@gamil.com
Comments
Post a Comment