புகைபிடிப்பதனால் ஒருவன் தன் வாழ்நாளில் 6 செக்கன்களை இழக்கின்றான்.......

புகைபிடிப்பதனால் ஒருவன் தன் வாழ்நாளில் 6 செக்கன்களை இழக்கின்றான்.......
சமுர்த்தியின் வாயிலாக உங்களை  சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன.  மே 31 தினம் எதை குறிக்கும் தினமாக இருக்கும் என்றால் பலருக்கு தெரியத விடயமாகவே இருக்கும். அந்த மே 31 நாள் நெருங்கும் போது தான் தொலைக்காட்சி, வானொலி, பத்திரிக்கை வாயிலாகவே மக்கள் பலருக்கு இது எதற்குறிய நாள் என அறியக் கூடியதாக இருப்பதை நாம் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
   உலக புகைத்தல் எதிர்ப்பு தினம் தான் மே இந்த 31 ஆகும். இந்த புகைத்தல் ஏற்படுத்தும் தாக்கம் பற்றி பலரும் அறிந்திருந்த போதும் இதிலிருந்து விடுபடுவதாக இல்லை என்றே கூறலாம். புகைத்தல் மூலம் ஓருவன் நாள் ஒன்றுக்கு சராசரி 80 தொடக்கம் 100ரூபா வரை செலவு செய்கிறான் ஆக மாத வருமானத்தில் 3000ரூபாவை இப்புகைக்கு சாம்பலாக்குகிறான். அவன் வருடம் ஒன்றுக்கு 36000 ரூபாவை செலவு செய்கிறான் என்றால் அவனது குடும்பத்தின் எத்தனையோ தேவைக்கு இந்த பணம் உதவும் என இதை வாசித்து ஒரு உள்ளம் உணர்ந்து மாற்றத்தடன் செயற்பட்டால் அதுவே எமக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும்.
            புகைபிடிப்பதனால் ஒருவன் தன் வாழ்நாளில் 6 செக்கன்களை இழப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. மற்றும் அயலில் இருப்பவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், ஒருவர் புகை பிடிப்பதனால் தலை முதல் பாதம் வரை பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. சிகரட்டின் விலையை கூட்டுவதன் மூலம் ஓரளவு இதை குறைக்க முடியும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. இதை தடைப்படுத்த நம் பிரதேசங்களில் சில நடைமுறைகளை செயற்படுத்தி வருகிற்து அரசாங்கம் என்றே கூறலாம். பொது இடங்களில் புகை பிடிக்க தடை, 18 வயதிற்குட்பட்டோருக்கு புகையிலை விற்கத்தடை, சிகரட் பெட்டிகளில் புகைத்தலால் ஏற்படும் பாதிப்புக்கள் பற்றி புகைப்படம் பொறிக்ப்படுதல் போன்ற செயற்பாடுகளை கூறலாம்.
  நீங்கள் நினைக்கலாம் புகைத்தலுக்கும் சமுர்த்திக்கும் என்ன தொடர்பு உண்டென்று தொடர்பு உண்டு தான்;, சமுர்த்தி திட்டம் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட சில வருடங்களின் பின் சமுர்த்திக்கே உரித்தான ஒரு நிகழ்வாக இப்புகைத்தல் எதிர்ப்பு தினம் இலங்கையில் ஏற்படுத்தப்பட்டது. ஆரம்ப காலங்களில் ஒரு தினமாக மே 31 மட்டும் நடைமுறைபடுத்தப்பட்ட  இத்தினம் 2008ம் ஆண்டு புகைத்தல் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரமாக ஒரு வாரம் நடைமுறைபடுத்தப்பட்டது, அது 2009ம் ஆண்டு மூன்று வாரமாக செயற்படுத்தப்பட்டு 2018ம் ஆண்டு ஒரு மாதமாக நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றது. இக்காலத்தில் கிராமங்கள் பாடசாலைகள் தோறும் புகைத்தல் எதிர்ப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்குகள், தெருக்கூத்துக்கள், நாடகங்கள், மற்றும் முக்கிய நிகழ்வாக கொடி விற்பனையும் இடம்பெறும்.
இதில் மிக முக்கிய விடயமாக கொடி விற்பனை மூலம்; சேகரிக்கப்படும் நிதியானது விதவைத்தாய்மாருக்கு வீடு அமைத்து கொடுப்பதற்கும்;, வறிய மாணவர்களுக்கு திசு திரிய புலமை பரிசில் திட்டங்கள் வழங்குவதற்கும்; வழங்கப்படுகின்றது. எனவே இக்கொடி விற்பனைக்கு பெரும்பாலான் பொது மக்கள் பங்களிப்பு செய்யாமல் விமர்சனம் செய்வதிலேயே இருக்கின்றனர் அதை விடுத்து இம்முறை சிறப்பாக பங்களிப்பு செய்து பிறருக்கு உதவ முன்வருவோம். ஓவ்வொரு கிராமத்தில் இருந்து சேகரிக்கப்படும் ஒவ்வொரு ரூபாவும் இக்கிராமத்தில் இருக்கும் ஒவ்வொரு வறியவருக்கும் சென்றடையும் இதை உறுதியாக உங்களுக்கு தெரிவிக்கின்றேன்.

என்றும் அன்புடன்
பா.ஜெயதாஸன்
சமுர்த்தி உத்தியோகத்தர் (வேப்பவெட்டுவான்)

செய்திகள் - சமுர்த்தி ஜெயா
சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் பார்வையிட -www.jeyasdo.com


மட்டு மாவட்ட சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் அறிவிக்க - Email - jeyasdo@gamil.com











Comments