டெங்குக்கு 30 நிமிடங்கள் செலவிடுவோம்.......
ஏறாவூர் பற்று பிரதேச செயலக ஒருங்கமைப்புக் குழு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்தும் முகமாக 30 நிமிடங்கள் செலவிடுவோம் டெங்குவை கட்டுப்படுத்துவோம் எனும் தொனியில் கிராமம் தோறும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இதன் ஒரு கட்டமாக பதுளை வீதிகளில் உள்ள கிராமங்களுக்கான இவ்வேலைத்திட்டத்தை சுகாதார பரிசேதகர்களான திரு.த.ராஜா ரவிதர்மா மற்றும் திரு.பொ.மனோகரனின் மேற்பார்வையில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது முதல் கட்டமாக அன்மையில் கரடியநாறு கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்ட இச் செயற்திட்டம் இன்று 19.06.2018 செவ்வாய்கிழமை வேப்பவெட்டுவான் இலுப்படிச்சேனை கிராமத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக அதிய வெற்று பிலாஸ்டிக் போத்தல்களை சேகரிக்கும் மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்படும் என முன் கூட்டியே அறிவிக்கப்பட்டதால் அதிகப்படியான போத்தல்கள் சேகரிக்கப்பட்டதுடன் அவர்களது வீடுகளும் சுத்தமாக்கப்பட்டது. மற்றும் கிராம சமுர்ததி பெறும் குடும்பங்கள் தங்கள் கிராமத்தில் உள்ள சகலரது வீடுகளிலும் தாமாகவே முன் வந்து நுளம்புகள் பெருகக்கூடிய பொருட்களை தேடி அழித்தனர்.
இவர்களுடன் பிரதேச சபை உறுப்பினர் திரு.சர்வானந்தா, கிராம சேவகர். பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
செய்திகள் - சமுர்த்தி ஜெயா
சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் பார்வையிட -www.jeyasdo.com
மட்டு மாவட்ட சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் அறிவிக்க - Email - jeyasdo@gamil.com

Comments
Post a Comment