மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு சமுர்த்தி வங்கிகள் Super Grade வங்கிகளாக தெரிவு.....

மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு சமுர்த்தி வங்கிகள் Super Grade வங்கிகளாக தெரிவு.....

இலங்கை ரீதியாக உள்ள சமுர்த்தி வங்கிகளை தரப்படுத்தும் வேலைகள் நடைபெற்று வருகின்றது இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இரண்டு சமுர்த்தி வங்கிகள் Super Grade   வங்கிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் பூ.குணரெத்தினம் தெரிவித்துள்ளார்.
    அவர் மேலும் தெரிவிக்கையில் அன்மையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயத்தை மேற் கொண்ட வங்கி தரப்படுத்தல் குழுவினர் பார்வையிட்டதன் பிரகாரம் 08 சமுர்த்தி  வங்கிகளை A தரத்திலான வங்கிகளாக தெரிவு செய்தனர். இலங்கையில் 18 சமுர்த்தி வங்கிகள் Super Grade  தரத்திற்கு தெரிவு செய்யப்பட்ட போதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பற்று பிரதேச செயலக ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கியும் மாவடிவேம்பு சமுர்த்தி வங்கியும் Super Grade  தரத்திலான வங்கிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இவ்வங்கிகளின் தரம் பற்றி நாளை அல்லது மறுதினம் அறிவிக்கப்படவுள்ளதாகவும் கூறினார். மேலும் கருத்து தெரிவிக்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் A தரத்திற்கு 12 வங்கிகள் தெரிவு செய்த போதிலும் 4 வங்கிகளில் பரீட்சை மீதிகள் தயாரிப்பு பணிகள் சீர் செய்யப்படாததால்  08 வங்கிகளே A தரத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இத்தரப்படுத்தலுக்கான கௌரவிப்பு நிகழ்வு எதிர்வரும் 31ம் திகதிகளில் நடைபெறவுள்ளதாகவும் கூறினார்.

செய்திகள் - சமுர்த்தி ஜெயா.
Email - jeyasdo@gamil.com









Comments