இந்த இரண்டு வருட கல்வியே உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கும் ஏறாவூர் பற்று செயலாளர்......



இந்த இரண்டு வருட கல்வியே உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கும் ஏறாவூர் பற்று செயலாளர்......

சமுர்த்தி பயன்பெறும் குடும்பங்களின் மாணவர்களுக்கு சிப்தொற புலமைபரிசில் வழங்கும் நிகழ்வில்  ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் திரு.வில்வரெட்னம் மேற்கண்டவாறு கூறினார்.

  சமுர்த்தி திட்டத்தில் ஒரு அங்கமாக திகழும் சமூக காப்புறுதி பாதுகாப்பு திட்டத்தில் சமுர்த்தி முத்திரை பெறும் சமுர்த்தி பயனாளிகளின் மாணவர்களுக்கு சிப்தொற எனும் புலமை பரிசில் வழங்கப்பட்டு வருகின்றன். 2017-2019ம் ஆண்டுக்கான இப்புலமைபரிசிலுக்கு ஏறாவூர் பிரதேச செயலகம் சார்பாக 48 மாணவர்கள் தெரிவாகி அவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வானது 21.05.2018 அன்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் மேலும் கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர் தெரிவிக்கையில் 2008ம் ஆண்டு முதல் இத்திட்டம நடைமுறை படுத்தப்பட்டு வருவதாக கூறியதுடன் இந்த இரண்டு வருட படிப்பு தான் உங்கள் வாழ்க்கையை நிர்ணயிக்கும் ஒரு காலமாக இருப்பதால் நீங்கள் உங்கள் சிந்தனையை வேறு திசைகளில் விடாமல் கல்வி கற்று பல்கலைகழகம் செல்ல வேண்டும் இந்த வாய்ப்பு பலருக்கு கிடைக்காமல் உங்களுக்கு கிடைத்துள்ளதால் இதை பயனுள்ளதாக்க வேண்டியது உங்களின் பொறுப்பாவே உள்ளது என்றார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட உதவி பிரதேச செயலாளர் திருமதி.முகுந்தன் அவர்கள் உரையாற்றும் போது கல்வி கற்பதால் மாத்திரம் வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை நீங்கள் பாடசாலை மட்டத்தில் செய்யும் வேலைத்திட்டங்களுக்குத் தான் இப்போது புள்ளிகள் வழங்கப்படுவதாகவும் இதனால் ஆங்கில அறிவு கணனி அறிவு கிராம மட்டத்திலான பங்களிப்புகளில் போன்ற உங்கள் தரவுகளை தான் இப்போது உன்னிப்பாக பார்வையிடுவதாக கூறி இந்த புலமைபரிசில் உங்கள் கல்விக்கு உதவியாக இருக்கும் என தான் நம்புவதாகவும் கூறினார். இந்நிகழ்வில் ஏறாவூர் பற்று பிரதேச செயலக உதவி திட்மிடல் பணிப்பாளர் திரு.கருணாகரன் அவர்களும் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கினார்.

   இந்நிகழ்வை ஏறாவூர் பற்று பிரதேச செயலக தலைமயக முகாமையாளர் திரு.ஜெயராஜ் ஒழுங்கமைத்து நடாத்தியதுடன் இதற்கான சகல ஏற்பாடுகளையும் ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி சமூக காப்புறுதி பாதுகாப்பு உத்தியோகத்தர் திருமதி.புஸ்பலதா செய்து முடித்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இந்நிகழ்வில் சமுர்த்தி உத்தியோகத்தர்களும் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
செய்திகள் - சமுர்த்தி ஜெயா.


Email - jeyasdo@gamil.com

Comments