வேப்பவெட்டுவான் கிராமத்தின் புகைத்தல் எதிர்ப்பு தினம் இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயத்தில் சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது......
சமுர்த்தி புகைத்தல் எதிர்ப்பு தினமாகிய மே-31 ஆகிய இன்று வேப்பவெட்டுவான் கிராத்தில் பாடசாலைகளில் விழிப்புனர்வை ஏற்படுத்தும் முகமாக இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலய மாணவர்களுக்கு புகைத்தல் எதிர்ப்பு கொடிகளை விநியோகித்ததன் மூலம் ஆரம்பித்து வைக்கப்பட்டது இந்நிகழ்வில் பிரதி அதிபர் திரு.கிரிசாந்தன் மற்றும்
ஆசிரியர்களுடன் ஆறுமுகத்தான் சமுர்த்தி சங்க தலைவர்களும் அங்கத்தவர்களும் கலந்த கொண்டனர். மறுபுரத்தில் முதல் சமுர்த்தி கொடியை ஏறாவூர் பற்று பிரதேசசபை உறுப்பினர் திரு.சர்வானந்தன் பெற்றுக் கொண்டதன் மூலம் மே 31 முதல் யூன் 30 வரையிலான காலத்திற்திற்கான சேமிப்பை ஆரம்பித்து வைத்தார். விபுலானந்தா சமுர்த்தி சங்கம் இவருக்கு கொடியை சூட்டி அவரின் ஆதரவை பெற்று புகைத்தல் கொடி தினத்தை ஆரம்பித்துக் கொண்டனர். அத்துடன் மகாத்மா காந்தி சமுர்த்தி சங்கம் கிராம சேவகர் திரு.துரைரெத்தினத்திடம் தமது கொடியை வழங்கி புகைத்தல் எதிர்ப்பு கொடி தினத்தை ஆரம்பித்துக் கொண்டனர் இந்நிகழ்வில் பொருளாதார உத்தியோகத்தர் திரு.காண்டீபனும் கலந்து கொண்டார் இந்நிகழ்வுகள் அனைத்தையும் வேப்பவெட்டுவான் சமுர்த்தி உத்தியோகத்தர் திரு.பா.ஜெயதாசன் ஓழுங்கமைத்து நடாத்தியது குறிப்பிடத்தக்கவிடயமாகும். இதேவேளை கரடியநாறு சமுர்த்தி வங்கியிலும் சமுர்த்தி புகைத்தல் எதிர்ப்பு சேமிப்பை வங்கி முகாமையாளர் திருமதி.தயாளினி ஆரம்பித்து வைத்தர்.
செய்திகள் - சமுர்த்தி ஜெயா
சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் பார்வையிட -www.jeyasdo.com
மட்டு மாவட்ட சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் அறிவிக்க - Email - jeyasdo@gamil.com
Comments
Post a Comment