சமுர்த்தி மகா சங்கமும் புல்லுமலை-கோப்பாவெளி சமுர்த்தி சங்கமும் நடாத்திய முதியோர் சிறுவர் கௌரவிப்பு நிகழ்வு.....
ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி மகாசங்கமும், புல்லுமலை கோப்பாவெளி சமுர்த்தி சங்கங்களும் இணைந்து நடாத்திய சிறுவர், முதியோர், ஆசிரியர் தின நிகழ்வு 15.10.2015 அன்று புல்லுமலை சந்தைக்கட்டிடத்தில் தலைமையக முகாமையாளர் திரு.ஜெயராஜ் அவர்களின் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது.. இந்நிகழ்வில் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் திரு.உதயசிறிதர் அவர்கள் பிரதமவிருந்திராக கலந்து கொண்டதோடு புல்லுமலை செபமாலை மாதா ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை சுலக்சன் அவர்களும் கலந்து கொண்டார் வாழும் போது வாழ்த்துவோம் எனும் கருப்பொருளில் ஆறு முதியவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் 5ம் ஆண்டு புலமை பரீட்சையில் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் கோப்பாவெளி-புல்லுமலை பாடசாலை அதிபர்களும் கௌரவிக்கப்பட்டனர்;. 2015ம் ஆண்டு ஏறாவூர் பற்று பிரதேச செயலகம் அகில இலங்கை ரீதியாக புகைத்தல் எதிர்ப்பு வாரத்தில் கூடிய சேமிப்பை செய்து சாதனை படைத்திருந்தது. அதே போல் கோப்பாவெளி-புல்லுமலை கிராமத்திலும் புகைத்தல் எதிர்ப்பு வாரத்தில் சாதனை புரிந்த சேமிப்பாக சேகரிக்கப்பட்ட 478540 ரூபா பணத்தில் இருந்து 30 துவிச்சக்கர வண்டிகள் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டதுடன் ஆறு பயனாளிகளுக்கு மருத்துவ சிகிச்சைக்காக பணமும், திசுதிரிய கொடுப்பணவாக மாதம் ஒன்றுக்கு 500 ரூபா படி பத்து மாணவர்களுக்கு 6000 ரூபாய் கொடுப்பணவும் வழங்கப்பட்டது. இத்துடன் திசு உதய வேலைத்திட்டத்தின் கீழ் இரண்டு நன்கொடையாளர்களால் வருடத்திற்கு 6000 ரூபா வழங்குவதற்கான காசோலையும் வழங்கப்பட்டது இந்நிகழ்வுகளை நடைமுறை படுத்தவும் ஊக்கமும் அளித்து வழி நடாத்தியவர் ஏறாவூர் பற்று சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் திரு.கணேசமூர்த்தி என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இந்நிகழ்வில் சமுர்த்தி முகாமையாளர்கள் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பெருந்திரளான மக்களும் கலந்து கொண்டனர் இந்நிகழ்வை புல்லுமலை கோப்பாவெளி சமுர்த்தி சங்கங்களும் சமுர்த்தி உத்தியோகத்தர் பா.ஜெயதாசன் அவர்களும் ஒழுங்கமைத்து நடாத்தியதோடு இம் மாதத்திற்கான மாற்றம் பத்திரிக்கையையும் உத்தியோகத்தர் அவர்களால் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
செய்திகள் - சமுர்த்தி ஜெயா.
Email - jeyasdo@gamil.com
Comments
Post a Comment