மட்டு வைத்தியசாலையில் வைத்து வழங்கப்பட்ட மரணக்கொடுப்பணவு.........

மட்டு வைத்தியசாலையில் வைத்து வழங்கப்பட்ட மரணக்கொடுப்பணவு.........

வேப்பவெட்டுவான் கிராமத்தின் சமுர்த்தி பயனுகரியின் மகளாகிய சௌந்தரராஜன் வினோதினி  27.05.2018 அன்று அகால மரணமடைந்தார். எனவே இவருக்கான சமுர்த்தி சமூக பாதுகாப்பு காப்புறுதி பணத்தை இவரது உடலம் வைக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைத்து கிராம சமுர்த்தி அதிகாரி பா.ஜெயதாசன் மூலம் அவரது தயாராகிய திருமதி சௌந்தரராஜன் ரஜனியிடம் காலை 8.30 மணிக்கு வழங்கப்பட்டது.

  சமுர்த்தி திட்டத்தில் முத்திரை பெறும் சமுர்த்தி பயனுகரிகளுக்கு இவ்வாரான கொடுப்பணவுகள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தாலும் இறப்பு நிகழும் சந்தர்ப்பத்தில் அவ்விடத்தில் வழங்குவதே சிறப்பம்சமாகும். எனவே இன்று (27.05.2018) நடந்த இந்த நிகழ்வுக்கு கிராம சமுர்த்தி அதிகாரி எடுத்துக் கொண்ட முயற்சியாலும் இதற்கு அனுமதியளித்த தலைமையக முகாமையாளராலும் இதை விரைவாக செயற்படுத்திய பிரதேச செயலாளராலும் குறித்த பயனுகரிக்கு முற்பணமாக 10000 (பத்தாயிரம்) ரூபாய் காலை 08.30 மணிக்கு வழங்கப்பட்டது. இதுவே சமுர்த்தியின் தார்மீக கடமையும் வெற்றியுமாகும்.

செய்திகள் - சமுர்த்தி ஜெயா
சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் பார்வையிட -www.jeyasdo.com
மட்டு மாவட்ட சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் அறிவிக்க - Email - jeyasdo@gamil.com

Comments