சமுர்த்தி மகளிர் மற்றும் கல்விச்சாதனையாளர்கள் கௌரவிப்பு .....

சமுர்த்தி மகளிர் மற்றும் கல்விச்சாதனையாளர்கள் கௌரவிப்பு ..... 

புல்லுமலை-கோப்பாவெளி சமுர்த்தி சங்கங்கள் இணைந்து நடாத்தி சர்வதேச மகளிர் தின நிகழ்வு சிறுவர் கௌரவிப்பு நிகழ்வும் 17.03.2015 செவ்வாய்கிழமை புல்லுமலை சந்தைக்கட்டிடத்தில் மிக சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திரு.ஜெயராஜ் அவர்களும், கரடியனாறு சமுர்த்தி வங்கி முகாமையாளர் திரு.திவாகர் அவர்களும், ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும், கிராம சேவை உத்தியோகத்தர்களும், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரும், கோப்பாவெளி புல்லுமலை பாடசாலை அதிபர்கள் ஆசியியர்களும் கலந்து சிறப்பித்தனர்.
         மேலும் புல்லுமலை-கோப்பாவெளி கிராமத்தில் சிறப்பாக சமூகத்திற்கு சேவையாற்றிய ஆறு மகளிர் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் 2014ம் ஆண்டு 5ம் தர புலமை பரீட்சையில் சித்தியடைந்த மாணவிகளையும் கௌரவிக்கும் நிகழ்வும் இடம் பெற்றது. மற்றும் மாற்றம் எனும் சஞ்சிகையும் அன்றைய தினம் வெளியிடப்பட்டது விசேட அம்சமாகும்.
செய்திகள் - சமுர்த்தி ஜெயா.
Email - jeyasdo@gamil.com































Comments