வேப்பவெட்டுவான் கிராமத்தில் வெளியிடப்பட்ட மாற்றம் பத்திரிக்கை.......

வேப்பவெட்டுவான் கிராமத்தில் வெளியிடப்பட்ட மாற்றம் பத்திரிக்கை.......

வேப்பவெட்டுவான் கிராமத்தில் சமுர்த்தி உத்தியோகத்தராக தற்போது கடமையாற்றும் பா.ஜெயதாசன் மாற்றம் எனும் சமுர்த்தி பத்திரிக்கையை வெளியிட்டுள்ளார். இது அவர் வெளியிடும் 15வது பத்திரிக்கையாகும். இப்பத்திரிக்கையில் தான் கடமையாற்றும் கிராமத்தில் நிகழும் சமுர்த்தி செய்திகளை வெளியிடுவதுடன் கிராமத்தில் தேவைப்படும் குறைபாடுகளையும் சுட்டிக்காட்டுவதற்காகவும் வெளியிட்டு வருகின்றார். இவர் ஆரம்ப காலங்களில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இருதயபுரம் கிழக்கு கிராமத்தில் கடமையாற்றும் போது ஸ்நேகம் என்ற பெயரில் பத்திரிக்கையை ஆரம்பித்து இதன் பின் கல்லடிவேலூர் கிராமத்தில் கடமையாற்றும் போது இங்கும் ஸ்நேகம் எனும் பெயரில் வெளியிட்டு வந்தார். பின் ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் புல்லுமலை-கோப்பாவெளி கிராமத்தில் கடமையாற்றும்  போது மாற்றம் எனும் பெயரில் வெளியிடப்பட்டு தற்போது வேப்பவெட்டுவான் கிராமத்தில் மாற்றம் எனும் பெயரில் 15 பத்திரிக்கையை தன் முயற்சியால் வெளியிட்டு வருகின்றார். கடைசியாக வெளியிடப்பட்ட மாற்றம் பத்திரிக்கை தான் இது.








Comments