மே 31 புகைத்தல் எதிர்ப்பு தினம்......



மே 31 புகைத்தல் எதிர்ப்பு தினம்......

மே 31 புகைத்தல் எதிர்ப்பு தினம் கடந்த 2017ம் வருடம் ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி பிரிவு புகைத்தல் எதிர்ப்பு தினத்தில் புகைத்தல் எதிர்ப்பிற்கான விழிப்புனர்வு ஊர்வலம் ஒன்றை பிரதேச செயலக வளாகத்தில் ஆரம்பித்து பிரதான வீதியூடாக சென்று செங்கலடி சந்தியில் ஆர்ப்பட்டம் செய்து மீண்டும் பிரதேச செயலகத்தை வந்தடைந்தது. ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திரு.ஜெயராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஏறாவூர் பற்று பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு.கருணாகரன் கலந்து கொண்டதுடன் சமுர்த்தி முகாமையாளர்கள் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி பயனுகரிகள் பலரும் கலந்து கொண்டனர் இதன் போது புகைத்தல் எதிர்ப்பிற்கான வாசகங்களை மூன்று மொழிகளிலும் மக்கள் ஏந்தி சென்றதை அவதானிக்க முடிந்தது. இந்நிகழ்வை ஒழுங்கமைத்து நெறிப்படுத்தி இருந்தவர் ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.தவநீதன் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
செய்திகள் - சமுர்த்தி ஜெயா.
Email - jeyasdo@gamil.com

Comments