2017/2019 சிப்தொற புலமை பரிசிலுக்கு 48 பேர் தெரிவு......
சமுர்த்தி திட்டத்தில் முத்திரை பெறும் சமுர்த்தி பயனுகரிகளின் பிள்ளைகள் இரண்டாம் நிலைக் கல்விப் புலமைப்பரிசிலில் சிறந்த பெறுபேற்றை பெற்றால் அவர்களுக்கு சிப்தொற எனும் சமுர்த்தி புலமை பரிசில் வழங்கப்பட்டு வருகின்றது. 2017/2019 பருவ காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தின் ஊடாக 48 மாணவர்கள் சிப்தொற புலமை பரிசிலுக்கு தெரிவாகி உள்ளார்கள். இவர்களுக்கு மாதமொன்றுக்கு 1500 (ஆயிரத்தி ஐநூறு) ரூபா என்கின்ற அடிப்படையில் 20 மாதங்களுக்கான பணம் வழங்கப்படவுள்ளது. க.பொ.த (சதாரணம்) பரீட்சையில சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவர்களுக்கே இது வழங்கப்படவதுடன் இவர்களின் கல்விக்கும் உதவுவதற்காகவே இத்தொகை வழங்கப்படுகின்றது என ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திரு.ஜெயராஜா தெரிவித்ததுடன் இம்மாணவர்களுக்கான புலமை பரிசில் வழங்கும் நிகழ்வு மிக விரைவில் நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.

Comments
Post a Comment