2017-2019 சிப்தொற புலமை பரிசிலுக்கு வேப்பவெட்டுவான் மாணவி நே.பவித்திரா தெரிவு......

2017-2019 சிப்தொற புலமை பரிசிலுக்கு வேப்பவெட்டுவான் மாணவி நே.பவித்திரா தெரிவு......

சமுர்த்தி திட்டத்தில் முத்திரை பெறும் சமுர்த்தி பயனுகரிகளின் பிள்ளைகள் இரண்டாம் நிலைக் கல்விப் புலமைப்பரிசிலில் சிறந்த பெறுபேற்றை பெற்றால் அவர்களுக்கு சிப்தொற எனும் சமுர்த்தி புலமை பரிசில் வழங்கப்பட்டு வருகின்றது. 2017-2019  பருவ காலத்தில் வேப்பவெட:டவான் கிராமத்தை சேர்ந்த மாணவி செல்வி நேசகுமார் பவித்திரா சிப்தொற புலமை பரிசிலுக்கு தெரிவாகி உள்ளார்கள். ஏன வேப்பவெட்டுவான் சமுர்த்தி உத்தியோகத்தர் பா.ஜெயதாசன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் இவர்களுக்கு மாதமொன்றுக்கு 1500 (ஆயிரத்தி ஐநூறு) ரூபா என்கின்ற அடிப்படையில் 20 மாதங்களுக்கான இப் பணம் வழங்கப்படவுள்ளது.

நேசகுமார் ரூபாவதியின் கடைசி மகளான இவர்  வேப்பவெட்டுவான் அம்பாள் மகாவித்தியாலத்தில் கல்வி கற்று க.பொ.த (சாதாரணம்) பரீட்சையில A,3B,3C,2S ஆகிய பெறுபேற்றை பெற்று தற்போது உயர்தர கல்வியில் கலைப்பிரிவை தெரிவு செய்து செங்கலடி மத்திய கல்லூரியில் கல்வி கற்று வருகின்றார். ஆறு பேரை கொண்ட இவரது குடும்பத்தில் இவரது தந்தையார் கூலி தொழில் செய்து வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும் இந்நிலையில் இவருக்கு வழங்கப்படும் இத்தொகை இவரின் கல்விக்கு ஊக்குவிப்பாக அமையும் என வேப்பவெட்டுவான் சமுர்த்தி உத்தியோகத்தர் பா.ஜெயதாசன் தெரிவித்துள்ளார்.
செய்திகள் - சமுர்த்தி ஜெயா.
Email - jeyasdo@gamil.com

Comments