2013ல் கல்லடிவேலூர் புகைத்தல் எதிர்ப்பு வாரத்தில் இரண்டாமிடம்.....



2013ல் கல்லடிவேலூர் புகைத்தல் எதிர்ப்பு வாரத்தில் இரண்டாமிடம்.....

சமுர்த்தி திட்டத்தின் புகைத்தல் எதிர்ப்பு வார சேமிப்பில் 2013ம் ஆண்டு கல்லடிவேலூர் கிராமம் 104563 ரூபாய் சேகரித்து இரண்டாமிடத்தை பெற்றுக் கொண்டது.

கல்லடிவேலூர்; கிராமத்தில் உள்ள சமுர்த்தி சங்கங்கள் தங்கள் சங்கங்களுக்கான உண்டியல்களை தயார் செய்து வீதி வீதியாக மக்களிடம் பணச்சேமிப்பில் ஈடுபட்டனர் வார முடிவில் சேகரிக்கப்பட்ட பணத்தை சமுர்த்தி முகாமையாளரிடம் ஒப்படைத்தனர் இதன் மூலம் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் கல்லடிவேலூர் கிராமம் 104563 ரூபாய் சேகரித்து இரண்டாமிடத்தை பெற்றுக் கொண்டது.

 2013ம் ஆண்டு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்லடிவேலூர் கிராமத்தில் உள்ள 9 சமுர்த்தி சங்கங்களும் கல்லடி ஸ்ரீ சக்தி வித்தியாலயத்துடன் இணைந்து புகைத்தல் எதிப்பு ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை பாடசாலை அதிபர் திருமதி.அருட்சோதி ஆரம்பித்து வைக்க அப்பேரணி கல்லடி புதுமுகத்துவார கிராம அபிவிருத்தி கட்டிடத்திற்கு சென்று முடிவடைந்தது. இப்பேரணி வீதிகளில் சென்ற சந்தர்பத்தில் சங்க உறுப்பினர்கள் உண்டியல் சேமிப்பில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி ஆணையாளர் திரு.குணரெட்னம் மண்முனை வடக்கு சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திரு.கணேசமூர்த்தி கல்லடி சமுர்த்தி வங்கி முகாமையாளர் திரு.தங்கத்துரை ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களால் புகைத்தலால் ஏற்படும் பாதிப்பு பற்றி விளக்கவுரையும் வழங்கப்பட்டது.

; மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில்; 48 கிராமங்கள் காணப்படுகின்றன 2013ம் ஆண்டுக்கான சமுர்த்தி புகைத்தல் எதிர்ப்பு சேமிப்பு வாரத்தில் கல்லடிவேலூர் கிராமம் 104563 ரூபாய் சேகரித்து இரண்டாமிடத்தை பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்க விடயமாகும். இவ்வருடத்தில் சேமிக்கப்பட்ட பணத்தில் கல்லடிவேலூரை சேர்ந்த 10 பாடசாலை மாணவர்களுக்கு 10 துவிச்சக்கர வண்டிகளும் 05 நோயாளிகளுக்கு பண உதவியும்  வழங்கப்பட்டதாக அக்கிராமத்தில் அன்று சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றிய பா.ஜெயதாசன் தெரிவிக்கின்றார்.

செய்திகள் - சமுர்த்தி ஜெயா.
Email - jeyasdo@gamil.com

Comments