2011 சமுர்த்தி திறனாய்வு உற்பத்தி விற்பனை கண்காட்சி....





2011 சமுர்த்தி திறனாய்வு உற்பத்தி விற்பனை கண்காட்சி....

சமுர்த்தி திட்டத்தில் சமுர்த்தி பயனாளிகளுக்கு கடன் வசதி மற்றும் வாழ்வாதார உதவிகள் வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடன் ஆண்டு தோறும் அவர்களின் உற்பத்தியை காட்சிப்படுத்துவதுடன் இதற்கான சந்தை வாய்ப்பை ஏற்படுத்து நோக்குடன் சமுர்த்தி அமைச்சு வருடந்தோரும் உற்பத்தியும் விற்பனையும் எனும் கண்காட்சியை நடாத்தி வருகின்றது இதன் அடிப்படையில் 2011ம் ஆண்டு அப்போது மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதிப்பணிப்பாளராக இருந்த மா.நடேசராஜா அவர்களின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் இரண்டு நாள் கண்காட்சியாக 2011 நவம்பர் 03 மற்றும் 04ம் திகதிகளில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அப்போதிருந்த அமைச்சர்களும் அப்போதிருந்த சமுர்த்தி அதிகாரசபையின் பணிப்பாளர் அவர்களும் கலந்து கொண்டனர். இக்கண்காட்சியில் மண்முனை வடக்கு பிரதேச செயலக புளியந்தீவு சமுர்த்தி வங்கியூடாக பயனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஆட்டோக்களை வழங்கியதுடன் மாவட்ட செயலகம் ஊடாக பயனாளிகளுக்கு தொழில் முயற்ச்சியாளர்களுக்கு வாழ்வாதார உதவிகளும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகத்தாலும் உற்பத்தி பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமர்கும் இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதுடன் சமுர்த்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். என்று மறக்காத பசுமை நினைவுகள் மீட்டிப்பார்க்க சந்தர்ப்பம் கிடைத்ததற்கு இறைவனுக்கு நன்றி..........
செய்திகள் - சமுர்த்தி ஜெயா.
Email - jeyasdo@gamil.com

Comments