நாவற்குடா புனித சின்ன லூர்த்து அன்னை திருத்தலத்தின் 110 வது திருவிழா நான்காம் நவநாள்........
மட்டக்களப்பு நாவற்குடா புனித சின்ன லூர்த்து அன்னை திருத்தலத்தின் 110 வது திருவிழா 11.05.2018 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது நான்காம் நாள் திருப்பலியை அருட்தந்தை பி.சுகந்தன் அவர்களால் புனிதர்கள் வாழ்வில் சமூக அக்கறை எனும் கருத்தில் திருப்பலி ஓப்புக்கொடுக்கப்படவுள்ளது இன்றைய நான்காம் நவநாளை செபமாலை மாதா வட்டார இறைமக்கள் சிறப்பிப்பர்.
செபமாலை மாதா வட்டாரக்குழு........
நாவற்குடா சின்ன லூர்து அன்னை ஆலயத்தில் எட்டு வட்டாரங்கள் அன்னையின் பெயரைக் கொண்ட வட்டார குழுக்களாக செயற்பட்டு வருகின்றோம். இதில் எங்கள் வட்டார குழுவுக்கு செபமாலை மாதா வட்டாரகுழு என நாமம் சூட்டி அழகுபார்ப்பதுடன் பெருமையும் அடைகின்றோம் இனி நாம் செபமாலை மாதா என பெயர் வந்தமைக்கான வரலாற்றை சற்று நோக்குவோம்.
தூய செபமாலை அன்னை என்ற பெயர் கத்தோலிக்க திருச்சபையின் பக்தி முயற்சிகளில் ஒன்றாகிய செபமாலையின் தாய் என்ற அடிப்படையில் அன்னை மரியாவுக்கு வழங்கப்படுகின்ற பெயராகும்
கி.பி 13 நூற்றாண்டின் பேதகத்தினால் கிறிஸ்தவ விசுவாசம் தளர்ச்சியுற புனித தொமினிக் மக்களை பாதுகாக்குமாறு மரியன்னையிடம் வேண்டினார். 1208ம் ஆண்டு முரே என்ற இடத்தில் மரியன்னை காட்சியளித்து இயேசுவின் வாழ்வில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை தியானித்த மங்களவார்த்தை செபங்களை செபிக்கும் செபமாலையை செபிக்கும்படி கூறினார்.
1913ம் ஆண்டில் பொத்தக்கல்லில் பாத்திமா நகரில்காட்சியளித்த அன்னை மரியா தன்னை செபமாலை அன்னை என அறிமுகம் செய்து கொண்டார்.
இனி எங்கள் குழுவைப்பற்றி நீங்கள் அறிந்து கொள்வதற்காக:
எம் குழுவில் 24 குடும்பங்கள் அங்கம் வகிக்கின்றன ஆலயத்தை விட்டு தொலை தூரத்தில் நாம் இருந்தாலும் இறைவனின் அன்பிலே எப்பொதும் நெருங்கியே இருக்கின்றோம். கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு போன்றவற்றில் அன்னையின் திருக்கரத்தால் பூரண ஆசி பெற்றவர்களாய் நாம் காணப்படுவதில் பெருமை கொள்கின்றோம். பெருவாரியாக எம் குழுவை சார்ந்தோரை அரச உத்தியோகத்தர்களாகவும், தனியார் தொழில் செய்வோராகவும் ஆண்டவர் ஆசீர்வதித்துள்ளமை அதிகம். அத்துடன் எம் குழந்தை செல்வங்களுக்கு ஆண்டவர் கொடுத்த தாலந்துக்களுக்கும் நன்றி கூறுகின்றோம்
பக்திச்சபைகளான பீடப்பணியாளர்கள், வின்சன் டி போல் சபை, பாலத்துவ சபை, மறையாசிரியர்கள் என்பவற்றில் நிறைவான பங்களிப்பை வழங்குவதுடன், பங்குத்தந்தையாலும் பங்கு உறுப்பினர்களாலும் வழங்கப்படும் செபவழிபாடு திருப்பலி ஆயத்தங்களை எப்போதும் ஒற்றுமையுடனும். பக்தியுடனும், பணிவுடனும் நாம் செய்து வருகின்றோம். முற்றும் ஆலய செயற்பாடாகிய ஒளிவிழா, ஆலயதிருவிழா, தைப்பொங்கல் விழா, தவக்கால வழிபாடுகள், மாதாந்த திருப்பலி வழிபாடுகள் என்பற்றில் எம் குழு நிதானமாகவும், நிறைவாகவும், புரிந்துணர்வுடனும் செயற்படுகின்றது.
ஆலயத்திற்கான பொருளாதாரபங்களிப்பில் எம் குழுவை பொறுத்த மட்டில் சிலுவைப்பாதைக்கான சிலுவை அமைத்தல், சேமக்காலைக்கான வேலி அமைத்தல், கிறிஸ்மஸ்மரம், ஆலய பராமரிப்பு, தவக்கால உண்டியல், ஐக்கிய உணவு நிகழ்வு, கிரிக்கெட் போட்டி, போன்றவற்றிலும் எமது கனவுகளில் ஒன்றான ஆலய கட்டுமான பணிக்கு உறவுகளாக ஒன்றிணைந்து தனித்தூண், குழுக்காக இணைந்து தணித்தூண், குடும்பநிதி, ஆலய கட்டிட நிதிக்காக சிறியவர் முதல் முதியவர் வரை வீடு வீடாக வெளி பங்குமக்கள் மற்றும் நண்பர்களிடம் நிதி சேகரித்தமை, இறுவெட்டு விற்பனை, கட்டிட நிதி அட்டை சேகரிப்பு, சீமெந்திற்கான சேகரிப்பு போன்றவற்றில் மூலம் சிறப்பாக நிதி சேகரித்துள்ளோம்.

'லூர்த்து அன்னையே
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்'
Comments
Post a Comment