களைகட்டிய சமுர்த்தி சித்திரை புதுவருட கலாசார விளையாட்டு விழா.....

களைகட்டிய சமுர்த்தி சித்திரை புதுவருட கலாசார விளையாட்டு விழா.....

சமுர்த்தி திணைக்களத்தால் வருடந்தோரும் நடாத்தப்படும் சித்திரை புது வருட பாரம்பரிய கலாசார விளையாட்டு விழாவை ஏறாவூர் பற்று பிரதேச செயலக ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வலயத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.
  இந்நிகழ்வானது ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வலய வங்கி முகாமையாளர் திருமதி.சியாந்தினி தலைமையில் இடம் பெற்றது இந்நிகழ்வில் சமுர்த்தி முகாமையாளர்களான திரு.மனோகிதராஜ் திருமதி.பத்மா திரு.ஜெயராஜ் திருமதி.ரதிதேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
   பாரம்பரியத்தை நினைவு கூறும் கலாசார விளையாட்டுகள் இடம் பெற்றதுடன் சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் சமுர்த்தி வங்கி கட்டுப்பாட்டுச்சபை தலைவர் உறுப்பினர்கள் மற்றும் பெருந்திரளான மக்களும் கலந்து கொண்டனர்.

செய்திகள் -சமுர்த்தி ஜெயா


















Comments