வறுமைக்கு காரணம் எம்மை சுற்றியுள்ள நச்சு வட்டமே........

வறுமைக்கு காரணம் எம்மை சுற்றியுள்ள நச்சு வட்டமே........

மக்களின் வறுமைக்கு காரணம் அவர்களை சுற்றியுள்ள நச்சு வட்டமே என ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தின் சமுர்த்தி பிரிவு நடாத்திய சௌபாக்கியா விற்பனையும் கண்காட்சி நிகழ்வை ஆரம்பித்துவைத்த போது மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் திரு.மா.உதயகுமார் தெரிவித்தார்.
வருடம் தோரும் சமுர்த்தி திணைக்களத்தால்  சித்திரை புது வருட கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்று வருகின்றது. இவ்வருடமும் ஒவ்வொரு பிரதேச செயலகமும் இக்கண்காட்சியை சமுர்த்தி ஊடாக கடன் பெற்ற வாழ்வாதார உதவிகளை பெற்ற குடும்பங்களை இனம் கண்டு அவர்களின் உற்பத்திகளை காட்சிப்படுத்துவதோடு விற்பனை நடவடிக்கைகளிலும் ஈடுபடவேண்டும் என அறிவுருத்தப்பட்டதற்கினங்க ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி பிரிவு மயிலம்பாவெளி கிராமசேவகர் பிரிவில் இந்நிகழ்வை நடாத்தியது.
  இந்நிகழ்வானது  ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் திரு.ந.வில்வரெத்தினம் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வுக்கு பிரதமவிருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் திரு.மா.உதயகுமார் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார் அவர் தொடர்ந்து கூறுகையில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கடன்களை மாத்திரம் வழங்கி அதை அறவீடு செய்வது மாத்திரமின்றி அவர்கள்; வறுமைiயில் உள்ள மக்களை மேம்படுத்துவதற்கான செயற்பாடுகளை மேற் கொள்ள வேண்டும். வறுமைக்கு காரணம் நச்சுவட்டம் என்று சொல்வார்கள் ஒருவருடைய வருமானம் குறைவடையும் போது சேமிப்பு குறைவடையும் சேமிப்பு குறைவடைந்தால் முதலீடு குறைவாகும் முதலீடு குறைவடைந்தால் உற்பத்தி குறைவடையும் உற்பத்தி குறைவடைந்தால் அவர்களது வருமானம் குறைவடையும் இந்த நச்சுவட்டத்தை தீர்த்தால் ஒருவரை வறுமையில் இருந்து நீக்க முடியும் இதை தான் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில்  ஏறாவூர் பற்று உதவி பிரதேச செயலாளர் திருமதி.நா.முகுந்தன் உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு.கருணாகரன் கணக்காளர் திரு.ஜோச் ஆனந்தராஜ்நிர்வாகஉத்தியோகத்தர் கிராம உத்தியோகத்தர் பொருளாதார அபிவிருத்தி  உத்தியோகத்தர் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கருனாலய  நிர்வாகபொருப்பாளர் திரு;முருகதாஸ் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.













Comments