மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் கே.ஜெகன்நாத், பிரதேச செயலாளராக பதவியேற்பு!
மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளராக கடந்த எட்டு ஆண்டுகளாக பணியாற்றி, மாவட்ட விவசாயிகளின் நலனையும் விவசாயத் துறையின் முன்னேற்றத்தையும் நோக்கமாகக் கொண்டு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்த கே.ஜெகன்நாத், இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தரத்திற்கு (SLAS-I) பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இதனையடுத்து, அவர் திருகோணமலை மாவட்டத்தின் கோமரன்கடவல பிரதேச செயலாளராக எதிர்வரும் திங்கட்கிழமை (20) உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.
தனது சேவைக்காலத்தில் மாவட்ட விவசாயிகளின் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து பல்வேறு செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தியதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாய அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அதிகாரியாக ஜெகன்நாத் அவர்கள் பரவலாக அறியப்படுகிறார்.
மேலும், தமது கீழ் பணியாற்றிய அனைத்து உத்தியோகத்தர்களையும் எந்தவித பாகுபாடும் இன்றி சமமாக வழிநடத்தி, அவர்களது நன்மதிப்பையும் நம்பிக்கையையும் பெற்ற நிர்வாகியாகவும் அவர் திகழ்ந்துள்ளார். மாவட்டத்தின் விவசாய அமைப்புகளிடையிலும் அவர் மிகுந்த மதிப்பைப் பெற்ற அதிகாரியாகக் கருதப்படுகிறார்.

No comments:
Post a Comment