Friday, 21 March 2025

கொக்கட்டிச்சோலையில் பொலிசாரின் தேடுதல் வேட்டையில் 06 பரள் சகிப்பு, கோடா சிக்கின.................

கொக்கட்டிச்சோலையில் பொலிசாரின் தேடுதல் வேட்டையில் 06 பரள் சகிப்பு, கோடா சிக்கின.................

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் போலீசாரினால் முற்றுகை இடப்பட்டது இதில் 06 பரள்களில் கோடா, கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு கொட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உட்பட்ட மண்முனை பிரதேச வாவியை அண்டிய அடர்ந்த காட்டுப் பகுதியில் நீண்ட நாட்களாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை கொக்கட்டிச்சோலை பொலிஸார் இன்று (21 ) காலை சுற்றிவளைத்தனர்.

இச்சுற்றி வளைப்பு தேடுதலின் போது 06 பரள்களில் ஆயிரக்கணக்கான மில்லி லிட்டர் கோடா மற்றும் கசிப்பு போத்தல்களும் கைப்பற்றப்பட்டதுள்ளது.

கொக்கட்டிச்சோலை பொலிஸ் குழுவினர் சுற்றி வளைப்பை மேற்கொண்டிருந்தனர். சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது இவ்வாறு கசிப்பு உற்பத்தி நிலையத்தில் கசிப்பு உற்பத்திக்கான பயன்படுத்தப்பட்ட பெருமளவிலான உபகரணங்களும் பரள்கள் போத்தல்கள் பலன்கள் என்பனவும் பொலீசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் போது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


No comments:

Post a Comment

BattiEye

மட்டக்களப்பு லயன் கழகம் அபேக்சா நிறுவனத்துடன் இணைந்து நன்கொடைளை வழங்கியது......

 மட்டக்களப்பு லயன் கழகம் அபேக்சா நிறுவனத்துடன் இணைந்து நன்கொடைளை வழங்கியது...... மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கு மட...