நாளை (16) மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சில கிராமங்களின் கடற்கரைகளில் சிரமதானம் ...........
நாளை (16) மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சில கிராமங்களின் கடற்கரைகளில் சிரமதானம் ...........
க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் ஓர் அங்கமாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சில கிராமங்களின் கடற்கரைகளில் நாளை சிரமதானம் நடைபெறவுள்ளது.
க்ளீன் ஸ்ரீலங்கா (Clean SriLanka) வேலைத் திட்டத்தின் கீழ் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக வெளிக்கள பிரிவினரின் ஒழுங்கமைப்பில் கிராம சேவை உத்தியோகத்தர்களுடன் இணைந்து எதிர்வரும் 2025.02.16 ஆம் திகதி நாளை சூஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு பின்வரும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் கடற்கரையினை சுத்தம் செய்யவுள்ளது
1.குருக்கள்மடம்- வடக்கு
2.குருக்கள்மடம்- தெற்கு
3.செட்டிபாளையம்- வடக்கு
4.செட்டிபாளையம்- தெற்கு
5.பெரியகல்லாறு- 01
6.பெரியகல்லாறு- 01 தெற்கு
7.பெரியகல்லாறு- 02
8.பெரியகல்லாறு- 02 மேற்கு
9.பெரியகல்லாறு- 03
10.பெரியகல்லாறு- 03 தெற்கு
எனவே நாளை முன்னெடுக்கப்படவுள்ள சிரமதான நடவடிக்கையில் குறிப்பிட்ட கிராம சேவகர் பிரிவில் வசிப்போரை தவறாது கலந்து கொண்டு சிரமதானம் வெற்றிகரமாக இடபெற வலுச் சேர்க்குமாறு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக வெளிக்களப் பிரிவினர் கேட்டுக்கொள்கின்றனர்
Comments
Post a Comment