கல்முனை மற்றும் ஏறாவூர் பகுதியை சேர்ந்தோர் பயணித்த வேன் விபத்து........

கல்முனை மற்றும் ஏறாவூர் பகுதியை சேர்ந்தோர் பயணித்த வேன் விபத்து........

கல்முனை மற்றும் ஏறாவூர் பகுதியை சேர்ந்தோர் பயணித்த வேன் ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் விபத்துக்குள்ளானதில்  ஒருவர் பலியானதுடன், 19 பேர் காயமடைந்துள்ளனர். 

இக்குடும்பமானது நுவரெலியா நோக்கி  பயணித்த  வேளை வேன் நுவரெலியா - ரதெல்ல கிளை வீதி ஒன்றில் வைத்து லொறி  ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியதில்  நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, 19 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து (01) மாலை 06.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வேன் ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த 19 பேர்  நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 





Comments