மட்டக்களப்பு வெள்ள அனர்த்தத்திற்கு பின்னரான மண்டூர் - வெல்லாவெளி பிரதான வீதி தற்போதைய நிலைமை............

 மட்டக்களப்பு வெள்ள அனர்த்தத்திற்கு பின்னரான மண்டூர் - வெல்லாவெளி பிரதான வீதி தற்போதைய நிலைமை............                                    

கடந்த கால அரசாங்கங்கள் காபட்பாதை போடுவதற்கு தனியாருக்கு  கொன்ட்ராக்ட் வழங்கி இருந்தது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொறியலாளர் உட்பட  காபட் பாதை சீராக உறுதியாக போடப்பட்டதாக சிபாரிசு செய்திருந்தது. இன்றைய நிலைமை என்ன ? 

அசாதாரண காலநிலையாலும் வெள்ளப்பெருக்கினாலும் பாதைகள் உடைக்கப்பட்டு உடனடியாக செப்பனிட  வேண்டிய தேவை ஏட்பட்டுள்ளது. கவனித்து பார்த்தால் பாதை அடியில் போடப்பட்டுள்ள கிரவல் வெள்ளத்தில் அடிபட்டு போகவில்லை, அதற்க்கு மேல்  போடப்பட்ட  காபட் தான் கடும் சேதம் அடைந்துள்ளது.உறுதியாக  காபட் பாதை  போடப்பட்டிருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா ?

மட்டக்களப்பு மாத்திரமல்ல நாடு முழுவதும் இதே  போன்று தரமற்ற கார்பெட் பாதை அமைக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. இதற்க்கு பொறுப்பு கூறுவது யார்? அரசாங்கமா, அதிகாரிகளா, கொன்ட்ராக்ட்காரர்களா ?

ஊழல் கமிஷன் லஞ்சம் நாட்டின் தேசிய வியாதி. இந்த வியாதி இருக்கும் வரை நாடு முன்னேற போவதில்லை. நாடு பொருளாதாரத்தில் வீழ்ச்சி அடைந்ததற்கு அசசாங்கத்தை  மட்டும் குற்றம் சொல்ல முடியாது. நேர்மை இல்லாத,  குறுக்கு வழியில் பணம் தேடும் அரசாங்க அதிகாரிகளே காரணம் .

Comments