வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டக்களப்பு கல்லடி உப்போடை ராமகிருஷ்ண மிஷன் சமைத்த உணவு விநியோகம்................
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டக்களப்பு கல்லடி உப்போடை ராமகிருஷ்ண மிஷன் சமைத்த உணவு விநியோகம்................
மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் சமகால பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வசதிகுறைந்த குடும்பங்களுக்கு சமைத்த உணவு பொதிகளை நேற்று வழங்கிவைத்தது.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள திருப்பெருந்துறை - 70 குடும்பங்கள், நொச்சிமுனை - 25 குடும்பங்கள், சத்துருக்கொண்டான் -200 குடும்பங்கள், திராய்மடு - 50 குடும்பங்கள், புதூர் - 25 குடும்பங்கள், திமிலை தீவு - 40 குடும்பங்கள், வீச்சுக்கல்முனை - 30 குடும்பங்கள், பெரிய உப்போடை - 150 குடும்பங்கள், நாவற்குடா - 50 குடும்பங்கள், சேத்துக்குடா - 70 குடும்பங்கள், ஆகிய பிரதேசங்களில் மொத்தமாக மொத்தம் - 710 குடும்பங்களுக்கு சமைத்த உணவை வழங்கியது.
மட்டக்களப்பு இ.கி.மிசனின் மேலாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராஜ் நேரடியாக இப் பிரதேசங்களுக்கு சென்று வழங்கி வைத்தார். சில பிரதேசங்களுக்கு இயந்திரப்படகு மூலம் கொண்டு சென்று உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
Comments
Post a Comment