இலங்கையில் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள கடவுச்சீட்டு தொடர்பான சில தகவல்கள்.......

 இலங்கையில் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள கடவுச்சீட்டு தொடர்பான சில தகவல்கள்.......

இலங்கையில் 21.10.2024இல் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் கடவுச்சீட்டுக்களின் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இராஜதந்திர கடவுச்சீட்டு, உத்தியோகபூர்வ கடவுச்சீட்டு மற்றும் சாதாரண கடவுச்சீட்டுக்கள் மூன்று வெவ்வேறு வர்ணங்களில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில் சாதாரண கடவுச்சீட்டு கருமை நிறம்  புலப்படக்கூடிய வகையில் கருநீல நிறத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

கடவுச்சீட்டில் கீழ்வரும் அம்சங்கள் பாதுகாப்பு அம்சங்களுடன் புறவூதாக் கதிர்களில் ஒளிரக்கூடியவகையில் அச்சிடப்பட்டுள்ளன.

4-5ம் பக்கத்தில் தலதாமாளிகை

6-7ம் பக்கத்தில் நல்லூர் கந்தசுவாமி கோவில்

8ம் பக்கத்தில் கொழும்பு புனித லூசியா தேவாலயம்

9ம் பக்கத்தில் கொழும்பு பெரிய பள்ளிவாசல்

10-11ம் பக்கத்தில் அம்பாறை சேனாநாயக்க சமுத்திரம்

12-13ம் பக்கத்தில் அனுரதபுர ரூவன்வெலிசாய மகா விகாரை

14-15ம் பக்கத்தில் பதுளை ஒன்பது வில் பாலம்

16-17ம் பக்கத்தில் மட்டக்களப்பு வாவி

18-19ம் பக்கத்தில் கொழும்பு தாமரைக் கோபுரம்

20-21ம் பக்கத்தில் காலி கோட்டை

22-23ம் பக்கத்தில் கம்பகா இறப்பர் தோட்டம்

24-25ம் பக்கத்தில் ஹம்பாந்தோட்டை உப்பளம்

26-27ம் பக்கத்தில் களுத்துறை ளுவுஐடுவு மீனவர்கள்

28ம் பக்கத்தில் பின்னவல யானைகள் சரணாலயம்

29ம் பக்கத்தில் கிளிநொச்சி அடையாளமாக இலங்கை சாம்பல் இருவாச்சி பறவை

30ம் பக்கத்தில் குருநாகல் யாப்பகூவா குன்றுகள்

31ம் பக்கத்தில் தலைமன்னார் படகுத்துறை

32-33ம் பக்கத்தில் சிகிரியா குன்று

34ம் பக்கத்தில் மாத்தறை வெளிச்சவீடு

35ம் பக்கத்தில் யால தேசிய பூங்கா

36ம் பக்கத்தில் முல்லைத்தீவு கொக்கிலாய் பறவைகள் சரணாலயம்

37ம் பக்கத்தில் நுவரெலியா தேயிலை தோட்டம்

38-39ம் பக்கத்தில் பொலநறுவை பழமை நகரம்

40-41ம் பக்கத்தில் புத்தளம் டொல்பின் காட்சிக்காணல்

42-43ம் பக்கத்தில் சிவனொளிபாதமலை

44ம் பக்கத்தில் திருகோணமலை புறாத்தீவு

45ம் பக்கத்தில் வவுனியா அரிசி அறுவடை, என்பன அச்சிடப்பட்டுள்ளன.



Comments