மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்பிற்கான, வாக்குச் சீட்டுக்களின் விநியோகப்பணிகள் ஆரம்பம்...............

 மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்பிற்கான, வாக்குச் சீட்டுக்களின் விநியோகப்பணிகள் ஆரம்பம்...............

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்லுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான, வாக்குச் சீட்டு விநியோகப் பணிகளை, அஞ்சல் திணைக்களம் இன்று ஆரம்பித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிக்கவுள்ள, அரச திணைக்கள உத்தியோகத்திற்கான வாக்குச்சீட்டுகள் திணைக்களங்களுக்கு இன்று கையளிக்கப்பட்டன.

மட்டக்களப்பு பிரதான அஞ்சல் அலுவலகத்தில் இருந்து மாவட்டத்திலுள்ள அரச திணைக்களங்களுக்கான, வாக்குச்சீட்டுக்களை அஞ்சல் திணைக்கள ஊழியர்கள் எடுத்துச் சென்று விநியோகித்ததை அவதானிக்க முடிந்தது.

அரச திணைக்களங்களில் உள்ள பொறுப்புவாய்ந்த நிர்வாக உத்தியோகத்தர்கள், வாக்குச்சீட்டுப் பொதிகளைப் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மூன்று தேர்தல் தொகுதிகளிலும் காணப்படும் அரச திணைக்களங்களுக்கும் வாக்குச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டன.

Comments