மாற்றுத்திறனாளிகளை சமூகத்தோடு ஒன்றிணைக்க, செவிப்புலனற்றவர்களுக்கு NVQ - 4 தர, கணணி பயிற்சி...............

மாற்றுத்திறனாளிகளை சமூகத்தோடு ஒன்றிணைக்க, செவிப்புலனற்றவர்களுக்கு NVQ - 4 தர, கணணி  பயிற்சி...............

மட்டக்களப்பு YMCA நிறுவனத்தால் நடாத்தப்பட்ட, கணணி வரைகலை வடிவமைப்பு பயிற்சியை நிறைவு செய்த, செவிப்புலனற்ற மாணவர்களுக்கு NVQ - 4 தர சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (24)  நடைபெற்றது.

தேசிய ரீதியில் முதன் முறையாக கணணி வரைகலை வடிவமைப்பு பாடநெறியைப் பூர்த்தி செய்த, மாற்றுத்திறனாளிகளுக்கு NVQ - 4 தர சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு YMCA நிறுவன வாழ்வோசை பாடசாலை அதிபர் CA.தயாமதியின் ஒருங்கிணைப்பில், நிறுவன தலைவர் ARS.தவராஜா தலைமையில் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலய உதவி கல்வி பணிப்பாளர் ஹரிஹரராஜ், வலயக் கல்வி அலுவலக விசேட கல்வி ஆசிரியர் ஆலோசகர் S.சிவகுமார், சமூக சேவை திணைக்கள தொழில் பயிற்சி நிலைய அலுவலகப் பொறுப்பதிகாரி ஜீவிதன் சுகந்தினி, YMCA நிறுவன உறுப்பினர்கள், ஊழியர்கள், வாழ்வோசை பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






Comments