போரதீவுப்பற்று வெல்லாவெளி சக்தி விளையாட்டுக் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு................
போரதீவுப்பற்று வெல்லாவெளி சக்தி விளையாட்டுக் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு................
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் மட்டக்களப்பு, போரதீவுப்பற்று வெல்லாவெளி சக்தி விளையாட்டுக்கழகத்திற்கு கடினபந்து கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு (07) சக்தி விளையாட்டுக் கழகத்தலைவர் தலைமையில் வெல்லாவெளி மாரியம்மன் ஆலய முன்றலில் நடைபெற்றது.
நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் மற்றும் கட்சியின் அம்பாறை பிரதேச அமைப்பாளர் பிரசாந், கட்சியின் முக்கியஸ்தர்கள் உட்பட சக்தி விளையாட்டுக்கழகத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதன் போது சுமார் மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment