மட்டு, அமிர்தகளி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த ஆடி அமாவாசை உற்சவம்...............

 மட்டு, அமிர்தகளி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த ஆடி அமாவாசை உற்சவம்...............


வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகளி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த ஆடி அமாவாசை உற்சவம் (04) காலை சிறப்பாக நடைபெற்றது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றினை ஒருங்கே கொண்ட ஆலயத்தின் மஹோற்சவமானது கடந்த 26ம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

ஆலய பிரதமகுரு சிவாகம கலாநிதி சிவஸ்ரீ கமலராஜ குருக்கள் தலைமையில் உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது. (04) காலை விநாயகர் மற்றும் கொடித்தம்பத்திற்கு விசேட பூஜைகள் நடைபெற்று பஞ்சமுக விநாயகருக்கு வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று சுவாமி வீதியுலா சிறப்பாக நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்தோற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றதோடு, இதன்போது தந்தையை இழந்தவர்கள் பிதிர்க்கடன் செலுத்தி தமது தோசங்களை நிவர்த்தி செய்தனர்.










Comments