மட்டக்களப்பில் குடிசன வீட்டுவசதிகள் தொகை மதிப்பு வேலைத்திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல்.....................

 மட்டக்களப்பில் குடிசன வீட்டுவசதிகள் தொகை மதிப்பு வேலைத்திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல்.....................

2024ம் ஆண்டுக்கான குடிசன வீட்டுவசதிகள் தொகை மதிப்பு கணக்கெடுக்கும் வேலைத்திட்டம் தொடர்பில், தொகை மதிப்பு ஆணையாளர், பிரதி மற்றும் உதவித்தொகை மதிப்பு ஆணையாளர்களை தெளிவூட்டும் நிகழ்ச்சித்திட்டம் மட்டக்களப்பில் இன்று நடைபெற்றது.

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் ஏற்பாட்டில் மாவட்ட அரசாங்க அதிபர். ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் தெளிவூட்டும் நிகழ்ச்சித்திட்டம் நடைபெற்றது.

மாகாண இணைப்பு வெளிக்கள முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.எச்.எம் மன்சூர், மாவட்ட புள்ளிவிபரவியலாளர், உதவி தொகை மதிப்பு அத்தியட்சகர் டி ஜெய்தனன். மாவட்ட இணைப்பு உத்தியோகத்தர் ஜெயசம்பத் லியனகே,  தலைமையக புள்ளிவிபர உத்தியோகத்தர் எம்.ஐ.ஏ.அலீஸ் உட்பட பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக பிரதம கணக்காளர்கள், மாவட்ட புள்ளிவிபர திணைக்கள உத்தியோகத்தர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர் .

Comments