ஆரையம்பதி, காங்கயனோடையில் பகுதியில் வர்த்தக நிலையங்கள் திடீர் சோதனை ..............
மட்டக்களப்பு ஆரையம்பதி, காங்கயனோடையில் பகுதியில் வர்த்தக நிலையங்கள் திடீர் சோதனை செய்யப்பட்டு பாவனைக்கு உதவாத பொருட்கள் கைப்பற்றப்பட்டதோடு வழக்கும் தொடரப்பட்டது.
(27) ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி DR.தே.திலக்ஷன் அவர்களின் தலைமையில் ஆரையம்பதி பொது சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட காங்கேயனோடை பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் உணவு கையாளப்படுகின்ற முறைமை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுகள் அழிக்கப்பட்டதுடன், ஒரு சில வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
Comments
Post a Comment